நீ​திக்கு போராடும் வழக்கறிஞராக டாப்ஸி!

நீ​திக்கு போராடும் வழக்கறிஞராக டாப்ஸி!
Updated on
1 min read

நடிகை டாப்ஸி, தமிழ், தெலுங்கு படங்​களில் நடித்து வந்தார். இப்​போது இந்​தி​யில் கவனம் செலுத்தி வரு​கிறார். இவர்​, ‘பீட்’, ‘அனேக்’, ‘தப்​பட்’, ‘ஆர்​டிகிள் 15’ போன்ற கவனிக்கப்பட்ட படங்​களை இயக்​கிய அனுபவ் சின்ஹாவின் ‘அஸ்ஸி’ என்ற படத்​தில் இப்​போது நடித்துள்ளார்.

இரு​வரும் ஏற்​கெனவே ‘தப்​பட்’ படத்​தில் பணி​யாற்றி இருந்தனர். ‘அஸ்ஸி’யில், கனி குஸ்ரு​தி, ரேவ​தி, மனோஜ் பஹ்​வா, குமுத் மிஸ்ரா ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். ‘முல்க்’ படத்​துக்​குப் பிறகு இதில் டாப்ஸி வழக்​கறிஞ​ராக நடித்​திருக்​கிறார்.

இதன் டிரெய்​லர் நேற்று வெளி​யாகி வரவேற்​பைப் பெற்றுள்​ளது. அதில் நீதிக்​காகப் போராடும் தனது தேடலில் பின்​வாங்க மறுக்​கும் தளராத வழக்​கறிஞ​ராக டாப்​ஸி, வரு​கிறார். கனி குஸ்​ருதி இந்​தக் கதை​யின் உணர்ச்​சிப்​பூர்​வ​மான மைய​மாக விளங்​கு​கிறார்.

“இயக்​குநர் அனுபவ் சின்​ஹா, இந்​தப் படத்தை நேர்மையுடன் அணுகி இருக்​கிறார். டாப்ஸி சிறந்த நடிப்பை வழங்கி இருக்​கிறார். இது வெறும் திரைப்​படம் மட்​டுமல்ல, இப்​படம் ஓர் உரை​யாடலைத் தொடங்​கும்” என்று தயாரிப்பாளர் பூஷன்குமார்​ தெரி​வித்​துள்​ளார்​.

நீ​திக்கு போராடும் வழக்கறிஞராக டாப்ஸி!
“தமிழ்... பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” - மாநிலங்களவையில் கமல்ஹாசன் முதல் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in