நடிகர் ஷாருக் கான் வீட்டை புதுப்பிப்​ப​தற்கு எதிரான மனு தள்ளுபடி

நடிகர் ஷாருக் கான்

நடிகர் ஷாருக் கான்

Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மும்​பை​ பாந்த்​ரா​வில் ‘மன்னத்’ என்ற பங்​களா​வில் வசிக்​கிறார்.

கடற்​கரை அரு​கில் உள்ள இந்​தப் பங்​களாவை புதுப்​பித்​து, கூடுதலாக 2 தளங்​கள் கட்ட முடிவு செய்​திருந்​தார். இதற்​காக மகாராஷ்டிர கடலோர ஒழுங்​கு​முறை மேலாண்மை ஆணையமும் தேசிய பசுமை தீர்ப்​பாய​மும் அனு​மதி வழங்கி இருந்​தது.

இந்த அனு​ம​தி​யில் சுற்​றுச்​சூழல் விதி​முறை​கள் முறை​யாகப் பின்பற்​றப்படவில்லை என்று மும்​பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்​தோஷ் என்​பவர், உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இதை உச்சநீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு விசா​ரித்​தது. மனுதா​ரர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் ஷோயப் ஆலம், ரூ.5 கோடிக்​கும் அதிக மதிப்​புள்ள கட்​டிடங்​களுக்கு பெற வேண்டிய அனு​ம​தி​கள், முறை​யாகப் பெறப்​பட​வில்லை என்​றும் ஷாருக் கான், பிரபல நடிகர் என்​ப​தற்​காகச் சலுகை வழங்​கக் கூடாது என்​றும் வலி​யுறுத்​தி​னார்.

“சட்ட விதி​முறை​கள் பின்​பற்​றப்​பட்​டுள்​ளன. ஒரு வீட்​டின் உரிமையாளர் தனது வீட்​டில் கூடு​தல் தளங்​களை அமைக்க விரும்​பி​னால், அது அவர்​கள் விருப்​பம். இதில் வேறு யாரோ ஏன் தலை​யிட வேண்​டும் ? ” என்று உச்​சநீ​தி​மன்ற அமர்வு கருத்து தெரிவித்து அந்த மனு​வைத் தள்​ளுபடி செய்​தது.

<div class="paragraphs"><p><em>நடிகர் ஷாருக் கான்</em></p></div>
ரஷ்யா தடைகள் மசோதாவை தளர்த்த அமெரிக்கா முடிவு: இந்தியா மீதான வரி 500%-ல் இருந்து 100% ஆக குறையும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in