மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன்

மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன்
Updated on
1 min read

பழம்​பெரும் பாலிவுட் நடிகை மதுபாலா, சுமார் 70 படங்களில் நடித்​துள்​ளார். உடல் நலப் பிரச்​சினை காரணமாக தனது 36 வயதில் மரணமடைந்த இவருடைய வாழ்க்கை கதை சினி​மா​வாக உரு​வாகிறது. இதை பிரபல பாலிவுட் இயக்​குநர் சஞ்​சய் லீலா பன்​சாலி தயாரிக்க இருக்​கிறார். ஜஸ்​மீத் கே ரீன் இயக்​கு​கிறார். இவர் ஆலியா பட் நடித்த ‘டார்​லிங்​ஸ்’ படத்தை இயக்​கிய​வர்.

இதில் மது​பாலா​வாக கியாரா அத்​வானி நடிக்க இருப்பதாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்​தன. படக்​குழு அதை மறுத்​திருந்​தது. இந்​நிலை​யில் அந்த பயோபிக்​கில் சாரா அர்​ஜுன்​ நடிக்​க இருப்​ப​தாகக்​ கூறப்​படு​கிறது. குழந்​தை நட்​சத்​திர​மாக, தமிழ்​, தெலுங்​கில்​ நடித்​து வந்​த சா​ரா அர்​ஜுன்​, ‘துரந்​தர்​’ படத்​தில்​ கதாநாயகியாக அறிமுகமானார்.

மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன்
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in