

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் நடித்து வருகிறார், சாய்பல்லவி. ரன்பீர் கபூருடன் ‘ராமாயணம்’ படத்தில் சீதையாக நடித்துள்ள அவர், இந்தி நடிகர் ஆமிர்கானின் மகன் ஜுனைத் கான் ஜோடியாக ‘மேரே ரஹோ’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இது தாய்லாந்தில் உருவான ‘ஒன் டே’ என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
சுனில் பாண்டே இயக்கியுள்ள இந்த ரொமான்டிக் படத்தின் முக்கியமான காட்சிகள், ஜப்பானின் சப்போராவில் நடக்கும் பனி திருவிழாவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் நவ.7-ம்தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் டிச.12-ல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது ஜூலை மாதத்துக்கு ரிலீஸை தள்ளிவைத்துள்ளனர்.
“டிசம்பர் மாதம் அதிக திரைப்படங்கள் வந்ததால் சரியான திரையரங்குகள் கிடைக்காது. அதனால் ஜூலை மாதத்துக்குத் தள்ளி வைத்துள்ளோம்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.