சனிக்கிழமை வெளியாகிறது ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர்!

சனிக்கிழமை வெளியாகிறது ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர்!

Published on

விஜய் நடித்துள்ள  ‘ஜனநாயகன்’ படத்தின் ட்ரெய்லர் நாளை (சனிக்கிழமை) வெளியாக உள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கெளதம் மேனன், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கியுள்ளன. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக தெரிகிறது. இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது படக்குழு. அதன் பிறகு இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு நாளை (ஜன.3) வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மாலை 6.45 மணிக்கு இந்த ட்ரெய்லர் வெளியாகிறது. 

சனிக்கிழமை வெளியாகிறது ‘ஜனநாயகன்’ ட்ரெய்லர்!
‘ஜனநாயகன்’ ரீமேக் படமா? - ‘ஹிண்ட்ஸ்’ தரும் ஹெச்.வினோத்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in