ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ தலைப்பு அறிவிப்பு

ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ தலைப்பு அறிவிப்பு

Published on

ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்துள்ள இந்தித் திரைப்படம், ‘துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கிய இந்த ஸ்பை த்ரில்லர்’ படம், 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் முதலிடத்தில் உள்ளது. இப்படம் இதுவரை ரூ. 1,280 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் ரூ.879 கோடி வசூலித்துள்ளது. இப்படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகத்துக்கு ‘துரந்தர் தரிவெஞ்ச்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் டீஸர் இப்போது உருவாகியுள்ளது. இந்த டீஸருக்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ரன்வீர் சிங்கின் ‘துரந்தர் 2’ தலைப்பு அறிவிப்பு
இந்தியா - நியூஸி. டி20-ல் இன்று மோதல்: ஃபார்முக்கு திரும்பும் முனைப்பில் சூர்யகுமார் யாதவ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in