கொல்​கத்​தாவில் ‘ராமாயணா’ ஓடும் தியேட்டரில் அசைவ உணவுக்​குத் தடை

கொல்​கத்​தாவில் ‘ராமாயணா’ ஓடும் தியேட்டரில் அசைவ உணவுக்​குத் தடை
Updated on: 
1 min read

இந்​திப் பட இயக்​குநர் நிதேஷ் திவாரி ராமாயணக் கதையை ‘ராமாயணா’ என்ற பெயரில் திரைப்​பட​மாக இயக்​கி​யுள்​ளார். 2 பாக​மாக உரு​வாகி​யுள்ள இதன் முதல் பாகம் கடந்த 5-ம் தேதி வெளியானது.

இதில் ரன்​பீர் கபூர், ராம​ராகவும் சாய் பல்​லவி சீதையாகவும் ராவணனாக யாஷும் நடித்​துள்​ளனர். மேலும் அனுமனாக சன்னி தியோல், லட்​சுமணனாக ரவி துபே என பலர் நடித்​துள்ள இப்​படம், ஆங்​கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உட்​பட பல்​வேறு மொழிகளில் வெளியாகி​யுள்​ளது. வசூல் சாதனை படைத்து வரும் இப்​படம் 13 நாட்​களில் ரூ. 1,483.10 கோடி வசூலித்து ஓடிக்​கொண்​டிருக்​கிறது.

இந்​நிலை​யில், கொல்​கத்​தாவில் உள்ள எஸ்.வி.எஃப் சினிமாஸ் என்ற மல்​டி​பிளக்ஸ் நிறு​வனம், ‘ராமாயணா’ ஓடும் திரையரங்​கங்​களில் அசைவ உணவுக்கு தடை​வி​தித்​துள்​ளது. இந்​நிறு​வனத்​தின் 30 திரையரங்​கு​களில் இது அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

பார்​வை​யாளர்​களின் மத உணர்​வு​களைக் கருத்​தில் கொண்டு, இப்​படம் ஓடும் வரை திரையரங்​குக்​குள் சைவ உணவு​கள் மட்​டுமே வழங்​கப்​படும் என்று இந்த நிறு​வனம் அறி​வித்​துள்​ளது. இந்த நடைமுறை ‘ராமாயணா’ திரைப்​படத்​துக்கு மட்​டுமே பொருந்​தும் என்​றும் மற்ற திரைப்​படங்​களின் திரையிடல்​களின் போது உணவு சேவை​களில் எந்த மாற்​றமும் இருக்​காது என்​றும் தெரி​வித்​துள்​ளது.

கொல்​கத்​தாவில் ‘ராமாயணா’ ஓடும் தியேட்டரில் அசைவ உணவுக்​குத் தடை
ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து

X