‘கிச்சடியை கூட அப்படி யாரும் ஊட்டமாட்டார்கள்’ - அனுராக் கிண்டலுக்கு ‘கேரளா ஸ்டோரி 2’ இயக்குநர் பதில்

‘கிச்சடியை கூட அப்படி யாரும் ஊட்டமாட்டார்கள்’ - அனுராக் கிண்டலுக்கு ‘கேரளா ஸ்டோரி 2’ இயக்குநர் பதில்
Updated on
1 min read

சுதிப்டோ சென் இயக்​கத்​தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம், ‘த கேரளா ஸ்டோரி’. இந்​தப் படத்​துக்கு நாடு முழு​வதும் எதிர்ப்பு கிளம்​பியது. சில மாநிலங்​களில் இந்​தப் படம் தடை செய்​யப்​பட்​டது. இப்​போது ‘த கேரளா ஸ்டோரி 2: கோஸ் பியாண்ட்’ என்ற பெயரில் அதன் அடுத்த பாகம் உரு​வாகி இருக்​கிறது.

பிப்​.27-ல் வெளி​யாக இருக்​கும் இதை கமக்யா நாராயண் சிங் இயக்கி உள்​ளார். விபுல் ஷா தயாரித்​துள்​ளார். உல்கா குப்​தா, அதிதி பாடி​யா, ஐஸ்​வர்யா ஓஜா முதன்மை வேடங்​களில் நடித்​துள்​ளனர். இதன் டிரெய்​லரில் இந்​துப் பெண்​களை மதம் மாற்​று​வது, கட்​டாயப்​படுத்தி மாட்​டிறைச்சி சாப்​பிட வைப்​பது போன்ற காட்​சிகள் இடம்​பெற்​றிருப்​பது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இதை இயக்​குநரும் நடிகரு​மான அனு​ராக் காஷ்யப் கடுமை​யாகச் சாடி​யிருந்​தார்.

“இதன் டிரெய்​லரில் காட்​டு​வதைப் போல யாராவது அப்​படி மாட்​டிறைச்சி யை ஊட்​டு​வார்​களா? கிச்​சடியைக் கூட அப்​படி ஊட்​ட​மாட்​டார்​கள். அது முட்​டாள்​தன​மான படம். இந்​தப் படத்​தின் நோக்​கம், மக்​களிடையே பிரி​வினையை உரு​வாக்கி பணம் சம்​பா​திப்​பது​தான். தயாரிப்​பாளர் பேராசைக்​காரர்” என்​றார்.

இந்​நிலை​யில், இதற்​குப் படத்​தின் இயக்​குநர் கமக்யா நாராயண் சிங் பதில் அளித்​துள்​ளார். அவர் கூறும்​போது, “அனு​ராக் சொன்​னது​போல, ஒரு​வருக்கு யாரும் அப்​படி கிச்​சடி கூட ஊட்​டு​வ​தில்​லை.

ஒப்​புக்​கொள்​கிறேன். ஆனால் துர​திர்​ஷ்ட​வச​மாக, நம் சமூகத்​தில், மத மாற்​றத்​துக்​காகக் கட்​டாயப்​படுத்தி மாட்​டிறைச்சி ஊட்​டப்​படு​கிறதே. இது குற்​றம்​தான். பிரச்​சினை என்​னவென்​றால், அனு​ராக் காஷ்யப் மனரீ​தி​யாகப் பலவீன​மாகி​விட்​டார்; அவருக்கு எல்​லா​வற்​றி​லும் பிரச்​சினை இருக்​கிறது.

அவருக்​குப் புத்​தியை வழங்க எல்​லாம் வல்ல இறைவனை வேண்​டு​கிறேன்” என்று தெரி​வித்​துள்ள அவர், ``ஒரு படம் கட்​டாய மத மாற்​றம் அல்​லது ஏதாவது ஒரு விஷ​யத்​தில் அழுத்​தம் பற்​றிப் பேசி​னால், அது வெறுப்பு படம் என்று முத்​திரை குத்​தப் படு​கிறது. எந்​தவொரு விவாத​மும் தனிப்​பட்ட பரிந்​துரைகளை அடிப்​படை​யாகக் கொண்​டிருக்​கக் கூடாது, உண்​மை​களை அடிப்​படை​யாகக் கொண்​டிருக்​க வேண்​டும்​” என்​றும்​ கூறியுள்​ளார்​.

‘கிச்சடியை கூட அப்படி யாரும் ஊட்டமாட்டார்கள்’ - அனுராக் கிண்டலுக்கு ‘கேரளா ஸ்டோரி 2’ இயக்குநர் பதில்
‘தாய் கிழவி’ ட்ரெய்லர் எப்படி? - ராதிகாவின் புதிய அவதாரம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in