‘தாய் கிழவி’ ட்ரெய்லர் எப்படி? - ராதிகாவின் புதிய அவதாரம்!

‘தாய் கிழவி’ ட்ரெய்லர் எப்படி? - ராதிகாவின் புதிய அவதாரம்!
Updated on
1 min read

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படத்தில் ராதிகா சரத்குமார், பால சரவணன், சிங்கம்புலி, முனீஸ்காந்த், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா பணிபுரிந்து வருகிறார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - முற்றிலும் புதிய அவதாரத்தில் ராதிகா சரத்குமார் தோன்றுகிறார். படத்தின் அறிவிப்பின்போது அவரது தோற்றம் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு தாய்க்கும் அவரது மகன்களுக்கும் இடையிலான சொத்துப் பிரச்சினையே படத்தின் கதைக்களம் என்பதை ட்ரெய்லரின் மூலம் யூகிக்க முடிகிறது.

எனினும் ராதிகாவின் கதாபாத்திரம் குறித்து ட்ரெய்லரில் பெரிதாக காட்டவில்லை. சிங்கம்புலி, முனீஸ்காந்த், பாலசரவணனின் காமெடிகள் படத்தில் நன்றாக கைகொடுக்கும் என்பது ட்ரெய்லரின் மூலம் தெரிகிறது. இறுதியில் எல்லா கட்சிப் பெயர்களையும் சொல்லும் காட்சி வைரல் ரகம். படம் வரும் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘தாய் கிழவி’ ட்ரெய்லர் வீடியோ: 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in