நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு
Updated on
1 min read

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். இதை  வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் நயன்தாரா நாயகியாக இணைந்துள்ளார்.

ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்குச் சென்ற நயன்தாரா, இப்போது சல்மான் கான் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் தொடக்கவிழாவில் எடுத்த வீடியோவை சல்மான் கான் ரீல்ஸாக வெளியிட்டிருந்தார். அதில் இப்படத்தின் ரிலீஸையும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி இப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.

நயன்தாராவின் இந்திப் பட ரிலீஸ் அறிவிப்பு
நாசிக் டிசிஎஸ் மதமாற்ற வழக்கு: திடீரென பணி விலகிய ஊழியர்களிடம் மீண்டும் எஸ்ஐடி தீவிர விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in