

பிரபல இந்தி திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‘லவ் அண்ட் வார்’ என்ற காதல் படத்தை இயக்கியுள்ளார். இதில் ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கவுஷல் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
1960-களில் நடப்பது போன்ற கதையை கொண்ட இப்படத்தில் ரன்பீர் கபூரும் விக்கி கவுஷலும் விமானப்படை அதிகாரிகளாக நடிக்கின்றனர். “இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியங்களில் ஒன்றாகவும், இந்திய சினிமாவின் மிகப்பெரிய காதல் காட்சி அனுபவங்களில் ஒன்றாகவும் இப்படம் இருக்கும். தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் 2027-ம் ஆண்டு ஜன. 21-ம் இப்படம் வெளியாகிறது” என படக்குழு அறிவித்துள்ளது.
2025-ம் ஆண்டு வெளியாவதாக இருந்த இப்படம் பின்னர் கடந்த 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ரிலீஸை மாற்றி வைத்துள்ளனர்.