பெண் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க கீர்த்தி சனோன் ஆசை

பெண் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க கீர்த்தி சனோன் ஆசை
Updated on: 
1 min read

பெண் சூப்​பர் ஹீரோ கதா​பாத்​திரத்​தில் நடிக்​கும் ஆசை இருப்​ப​தாக நடிகை கீர்த்தி சனோன் தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “கிரே ஷேடு என்​கிற சிக்​கலான மனநிலை கொண்ட ஒரு கதா​பாத்​திரத்​தின் ஆழத்தை ஆராய்ந்து நடிக்க விரும்​பு​கிறேன். ஒரு நடிகை​யாக, நிஜ வாழ்க்​கை​யில் நான் இல்​லாத, முற்​றி​லும் மாறு​பட்ட கதா​பாத்​திரத்​தில் நடிப்​ப​தற்​கான வாய்ப்பை இது வழங்​கும். ஒரு பெண் சூப்​பர் ஹீரோ கதா​பாத்​திரத்​தில் நடிக்​க​வும் ஆசை இருக்​கிறது. இந்​தி​யா​வில் இந்​தி​யில் உரு​வான ‘கிரிஷ்’ மட்​டுமே சூப்​பர் ஹீரோ​வாக இருப்​ப​தாக எனக்​குத் தோன்​றுகிறது. ‘சக்​தி​மானும்’ இருக்​கிறார். ஆனால் அவர்​கள் ஆண்​கள்.

ஒரு பெண் சூப்​பர் ஹீரோ​வும் இருக்க வேண்​டும். அதை என்​னால் சிறப்​பாகச் செய்ய முடி​யும் என நம்​பு​ கிறேன். ஆக் ஷன் காட்​சிகளில் நடிக்​க​வும் எனக்கு விருப்​பம். சூப்​பர் ஹீரோ கதையை​யும் ஆக் ஷனை​யும் இணைத்​தால் அது சுவாரஸ்​ய​மாக​வும் இருக்​கும்” என்று கூறி​யுள்​ளார். அவர் மேலும் கூறும்​போது, இந்​திய சினி​மா​வில் பெண் கதா​பாத்​திரங்​களுக்​காக எழுதப்​படும் கதைகள் தற்​போது வலு​வாக மாறி வரு​கின்றன என்​றும் குறிப்​பிட்​டுள்​ளார்.

பெண் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க கீர்த்தி சனோன் ஆசை
Belonging: நான் ‘நான்’ ஆக இருக்க இடம் இருக்கிறதா? | டீனதிகாரம் 4
பெண் சூப்பர் ஹீரோ கதையில் நடிக்க கீர்த்தி சனோன் ஆசை
‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு - படக்குழு அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in