“சினிமாவில் எந்த மாற்றத்துக்கும் தனிநபர் மட்டுமே காரணமல்ல” - கங்கனா ரனாவத் கருத்து

“சினிமாவில் எந்த மாற்றத்துக்கும் தனிநபர் மட்டுமே காரணமல்ல” - கங்கனா ரனாவத் கருத்து
Updated on
1 min read

சினிமாவில் எந்தவொரு மாற்றத்துக்கும் தனி நபர் மட்டுமே காரணமல்ல என்று நடிகையும் எம்.பி.யுமான கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

பெண்கள் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கும் திரைப்படங்கள் இன்று அதிகரித்து வருவது குறித்து கங்கனா ரனாவத்திடம் கேட்டபோது கூறியதாவது:

இந்த மாற்றத்துக்குப் பல பெண்கள் பங்களித்துள்ளனர். மீனா குமாரி, மதுபாலா, நர்கிஸ் தத், வஹீதா ரஹ்மான், வைஜெயந்திமாலா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் எனத் திரையுலகில் நமக்கு பெண்களின் சிறந்த பாரம்பரியம் உள்ளது.

திரைத்துறையின் இந்த வளர்ச்சி, பல தலைமுறைகளைச் சேர்ந்த பெண்களின் கூட்டு முயற்சியால் உருவானது. இவர்களின் பங்களிப்புகளுக்கு எப்போதும் பரவலான அங்கீகாரம் கிடைப்பதில்லை. பெரும்பாலும் பெரிய சாதனைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் சிறிய பங்களிப்புகளும் முக்கியமானவை.

உதாரணமாக, இன்று நான் எனது கேரவனுக்குள் செல்லும் போதெல்லாம், நடிகைகளுக்காக கேரவன்களை கொண்டு வருவதற்கு பூனம் தில்லான் முக்கியக் காரணமாக இருந்தார் என்பதை நினைவில் கொள்கிறேன். அதற்கு முன்பு, கழிப்பறையைப் பயன்படுத்துவது, ஆடைகளை மாற்றுவது அல்லது ஒரு மரத்தின் நிழலில் டச்-அப் செய்வது போன்ற அடிப்படைத் தேவைகளுக்காகப் புதர்களுக்குப் பின்னால் செல்ல வேண்டியிருந்தது என்பது எவ்வளவு கடினமானது என்று கற்பனை செய்து பாருங்கள்.

எந்தவொரு மாற்றமும் தனி நபரால் மட்டுமே நடப்பதில்லை. யாரோ ஒருவர் தொடங்கி வைக்கிறார்கள்; மற்றவர்கள் அதை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார்கள், பயணம் தொடர்கிறது. அது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு கங்கனா ரனாவத் கூறியுள்ளார்.

“சினிமாவில் எந்த மாற்றத்துக்கும் தனிநபர் மட்டுமே காரணமல்ல” - கங்கனா ரனாவத் கருத்து
Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 20

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in