“இளம் தலைமுறையை தவறாக வழிநடத்தாதீர்” - இணைய கேலிகளுக்கு கங்கனா பதிலடி

“இளம் தலைமுறையை தவறாக வழிநடத்தாதீர்” - இணைய கேலிகளுக்கு கங்கனா பதிலடி
Updated on
1 min read

புதுடெல்லி: ஜென் ஸீ இளைஞர்களின் போராட்ட முறைகள் மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து பாஜக எம்.பி-யும் நடிகையுமான கங்கனா ரணாவத் கூறிய கருத்துகள் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன.

இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் சிலர், கங்கனா திரைப்படங்களில் நடித்த சில கவர்ச்சியான கதாபாத்திரங்களின் காட்சிகளைப் பகிர்ந்து அவரை இணையத்தில் கடுமையாக தாக்கி வந்தனர்.

இந்நிலையில், தன் மீதான விமர்சனங்களுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வாயிலாகக் கங்கனா காட்டமாகப் பதிலளித்துள்ளார். அதில், "கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டு, பலத்த பாதுகாப்புடன் ஒரு நடிகையாகத் திரைப்படக் கதாபாத்திரங்களில் நான் நடித்த காட்சிகளைப் பயன்படுத்தி, வளரும் இளம் தலைமுறையினரைத் தவறாக வழிநடத்த முயலாதீர்கள்.

திரையில் ஒரு கதாபாத்திரமாக நடிப்பது வேறு; நிஜ வாழ்க்கையில் பள்ளிகளிலோ, பொது வீதிகளிலோ அல்லது மதுபானக் கூடங்களிலோ நடப்பது வேறு. இளைஞர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லாதீர்கள். இன்று நீங்கள் மற்றவர்களின் குழந்தைகளைத் தவறாக வழிநடத்தினால், நாளை அது உங்கள் சொந்தக் குழந்தைகளுக்கே நடக்கும்" என்று சாடியுள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது பேசிய கங்கனா, மாணவர் போராட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். "நாங்களும் மாணவர் போராட்டங்களில் பங்கேற்றுள்ளோம்.

ஆனால், பெற்றோருக்குப் பாரமாக இல்லாமல், நாகரிகமான முறையில் நமது பண்பாட்டை நிலைநிறுத்துவதே உண்மையான மாணவர் சமூகத்திற்கு அழகு" என அவர் பேசியிருந்தார். 2006-இல் 'கேங்ஸ்டர்' திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான கங்கனா, இந்த ஆண்டுடன் திரையுலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இளம் தலைமுறையை தவறாக வழிநடத்தாதீர்” - இணைய கேலிகளுக்கு கங்கனா பதிலடி
ஜூடோவில் தங்கம் வென்று சாதனை படைத்தார் ஹர்ஷ் சிங் | CWG 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in