

ஜான்வி கபூர், இஷான் கட்டார், விஷால் ஜெத்வா என பலர் நடித்துள்ள இந்தி திரைப்படம், ‘ஹோம் பவுண்ட்’. நீரஜ் கேவான் இயக்கியுள்ள இப்படத்தைக் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
செப்.26-ம் தேதி வெளியான இப்படம், பஷாரத் பீர் என்பவர் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றின் அடிப்படையில் உருவானது. உண்மைச் சம்பவக் கதையைக் கொண்ட இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது பெற்றது. இதையடுத்து இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவுக்கான 15 படங்கள் கொண்ட குறும்பட்டியலை ஆஸ்கர் அகாடமி வெளியிட்டுள்ளது. அதில், ‘ஹோம்பவுண்ட்’ படமும் இடம்பெற்றுள்ளது. இந்த 15 திரைப்படங்களில் 5 படங்கள் இறுதி பரிந்துரைக்குத் தேர்ந்தெடுக்கப்படும். அது ஜனவரி 22-ம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.