“நான் சிறந்த நடிகர் இல்லை” - சொல்கிறார் சல்மான் கான்

“நான் சிறந்த நடிகர் இல்லை” - சொல்கிறார் சல்மான் கான்
Updated on
1 min read

இந்தி சினி​மா​வின் முன்​னணி நடிகர்​களில் ஒரு​வர் சல்​மான் கான். இந்​தியா முழு​வதும் ரசிகர்​களைக் கொண்​டுள்ள அவர், சவுதி அரேபி​யா​வில் நடக்​கும் ரெட் சீ சர்​வ​தேசத் திரைப்பட விழா​வில் கலந்து கொண்​டார். அப்​போது ரசிகர்​களு​டன் கலந்​துரை​யாடி​னார்.

நிகழ்ச்சி தொகுப்​பாளரின் கேள்விக்​குப் பதிலளித்த அவர், “நான் மிகச் சிறந்த நடிகன் என்று நினைக்​க​வில்​லை. நான் வேறு எதைச் செய்​தா​லும் நீங்​கள் அதைக் கண்​டு​

பிடிக்​கலாம், ஆனால் நடிப்​ப​தைக் கண்​டு​பிடிக்க முடி​யாது. என்​னால் அது முடிவ​தில்​லை. படப்​பிடிப்​பின்​போது எனக்கு எப்​படி உணர்வு தோன்​றுகிறதோ, அப்​படியே செய்​கிறேன். அவ்​வளவு​தான்” என்​றார்.

உடனே நிகழ்ச்சி தொகுப்​பாளர் ரசிகர்​களிடம், அவர் சொல்​வது உண்​மை​யா? என்று கேட்​டார். ரசிகர்​கள் மறுத்தனர். அவர் சிறந்த நடிகர்​தான் என்​றனர்.

அடுத்து பேசிய சல்​மான் கான், “சில படங்​களில் நான் அழும்​போது, நீங்​கள் என்​னைப் பார்த்​துச் சிரிப்​ப​தாக எனக்​குத் தோன்​றுகிறது” என்​றார். உடனடி​யாக ரசிகர்​கள், “இல்​லை, நாங்​களும் உங்​களு​டன் சேர்ந்து அழுகிறோம்” என்​றனர். இதைக் கேட்​டதும் சல்​மான் கான் புன்​னகை செய்​தார். இந்த வீடியோ சமூக வலை​தளங்​களில் வேக​மாகப்​ பரவி வருகிறது.

“நான் சிறந்த நடிகர் இல்லை” - சொல்கிறார் சல்மான் கான்
ரொமான்டிக் த்ரில்லர் கதையில் அசோக் செல்வன் - நிமிஷா சஜயன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in