

தமிழில் ரஜினியின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ படங்களில் நடித்திருப்பவர், இந்தி நடிகை ஹூமா குரேஸி. இவர் நடிகரும் நடிப்புப் பயிற்சிப் பயிற்றுநருமான ரசித் சிங்கை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் அதை மறுத்துள்ள ஹூமா குரேஷி, “திருமணம் எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும்; தற்போது எனது முழுக் கவனமும் நடிப்பிலும் தயாரிப்பிலும் உள்ளது. திருமணம் குறித்து பரவும் செய்தி பற்றிதான் என் அம்மாவும் கேட்கிறார்.
திருமணம் எப்போது நடக்கும் என்பதற்கு என்னிடம் இப்போது பதில் இல்லை. அது எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும். இந்த ஆண்டு சினிமா வேலைகள் எனக்கு அதிகம். தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது ஏன் என்று கேட்கிறார்கள்.
நடிகர்களாகத் தங்களுக்கான வாய்ப்புக்காக மற்றவர்களை எதிர்பார்த்துக் காத்திருப்பதை விட, சொந்தமாக வாய்ப்புகளை உருவாக்கவே, எனது சகோதரர் சாகிப் சலீமும் இணைந்து ‘சலீம் சிப்ளிங்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்” என்றார்.