அனைத்து எல்லைகளையும் இந்தி திரை​யுல​கம் மீறிவிட்டது: கங்கனா ரனாவத் சாடல்

அனைத்து எல்லைகளையும் இந்தி திரை​யுல​கம் மீறிவிட்டது: கங்கனா ரனாவத் சாடல்

Published on

துருவா சர்ஜா நடித்​துள்ள பான் இந்​தியா படம்,‘கேடி: தி டெவில்’. பிரேம் இயக்​கி​யுள்ள இப்​படத்​திலிருந்து சமீபத்தில் பாடல் ஒன்று வெளி​யானது. அதில் நோரா ஃபதேஹி, சஞ்​சய்தத் நடித்​துள்​ளனர்.

பாடல் வெளி​யான சில மணி நேரங்​களி​லேயே, அதன் வரிகள் மற்​றும் நடன அசைவு​கள் ஆபாச​மாக இருப்பதாகக் கூறி கடும் கண்​டனங்​கள் எழுந்​தன. தேசிய மனித உரிமை​கள் ஆணை​யம் படக்​குழு​வினருக்கு நோட்டீஸ் அனுப்​பியது. போலீ​ஸில் புகாரும் அளிக்கப்பட்டது.

அனைத்​திந்​திய திரைப்பட தொழிலா​ளர்​கள் சங்​கம் இப்​பாடலைக் கண்​டித்து மத்​திய தகவல் மற்​றும் ஒலிபரப்புத்துறை அமைச்​சர் மற்​றும் தணிக்கை வாரியத்துக்​குக் கடிதம் எழு​தி​யுள்​ளது. அதில், இந்​தப் பாடலை அனைத்து தளங்​களில் இருந்​தும் நிரந்​தர​மாக நீக்க வேண்​டும் என்​றும் விளம்​பரத்​துக்​காக வேண்டுமென்றே சர்ச்​சையை உரு​வாக்​கு​கிறார்​களா என்பது குறித்து விசா​ரணை நடத்த வேண்​டும் என்றும் கூறி​யுள்​ளது.

இந்​நிலை​யில், இந்தி திரை​யுல​கம் அனைத்து எல்லைகளை​யும் மீறி​விட்​டது என்று நடிகை​யும் எம்.பியுமான கங்​கனா ரனாவத் தெரி​வித்​துள்​ளார். அவர் கூறும்​போது, “ஆபாசம் மற்​றும் கவனத்தை ஈர்க்​கும் செயல்​களில் பாலிவுட் அனைத்து எல்​லைகளை​யும் மீறிவிட்​டது.

ஒட்​டுமொத்த நாடும் அவர்​களைக் கண்​டித்து வருகிறது. ஆனால் அவர்​களுக்​குச் சிறிதும் வெட்​கம் இருப்​ப​தாக எனக்​குத் தோன்றவில்​லை. இத்​தகைய ஆபாசமான, அரு​வருப்​பான காட்​சிகளைத் திரை​யிடுவதில் இன்​னும் கடுமை​யான விதி​கள், கட்​டுப்​பாடு​கள் பின்​பற்​றப்பட வேண்​டும் என நினைக்​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

அனைத்து எல்லைகளையும் இந்தி திரை​யுல​கம் மீறிவிட்டது: கங்கனா ரனாவத் சாடல்
போர்ச் சூழலிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிவது ஏன்? - ஒரு தெளிவுப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in