‘கூஷ்​கோர் பண்​டட்’ பட தலைப்பு சர்ச்சை: மனோஜ் பாஜ்பாய், நீரஜ் உரு​வப் பொம்மைகள் எரிப்பு

‘கூஷ்​கோர் பண்​டட்’ பட தலைப்பு சர்ச்சை: மனோஜ் பாஜ்பாய், நீரஜ் உரு​வப் பொம்மைகள் எரிப்பு
Updated on
1 min read

மனோஜ் பாஜ்​பாய். நுஷ்ரத் பரூச்​சா, ஷ்ரத்தா தாஸ் உள்பட பலர் நடித்​துள்ள இந்​திப் படம் ‘கூஷ்கோர் பண்​டட்’. ‘எ வெனஸ்ட்​டே’, ‘ஸ்​பெஷல் 26’, ‘எம்​.எஸ்​.தோனி: த அன்​டோல்டு ஸ்டோரி’ உள்பட பல படங்​களை இயக்​கிய நீரஜ் பாண்டே இதை தயாரித்​துள்​ளார். ரிதேஷ் ஷா இயக்​கி​யுள்​ளார்.

இதில் மனோஜ் பாஜ்​பாய் ஊழல் நிறைந்த போலீஸ் அதி​காரி​யாக நடித்​துள்​ளார். நெட்​பிளிக்ஸ் தளத்​தில் வெளி​யாக இருக்​கும் படத்தின் தலைப்​புக்​குப் பிராமண சமூகத்​தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிராமணர்​களைக் குறிக்​கும் வார்த்​தை​யான பண்​டிட்​டின் பேச்​சுவழக்​கான ‘பண்​டட்’ உடன் ‘கூஷ்கோர்’ (ஊழல்) என்ற வார்த்தையை இணைத்து பிராமண சமூகத்தை அவதூறு செய்​துள்ள​தாக அவர்​கள் குற்​றம் சாட்​டி​யுள்​ளனர்.

இத்​தலைப்​புக்கு எதி​ராக சமூக வலை​தளங்​களில் கடும் விமர்சனங்கள் எழுந்​தன. இத்திரைப்​படக் குழு​வினர் மீது வழக்​குப்​ ப​திவு செய்ய உத்​தரப்​ பிரதேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் உத்தரவிட்​டதை அடுத்து வழக்​குப்​ ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதற்கிடையே, யார் மனதையும் மதத்​தை​யும் புண்​படுத்​தும் நோக்​கம் தனக்கு இல்லை என்று நீரஜ் பாண்டே விளக்​கம் அளித்திருந்தார்.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் சர்ச்​சைக்​குரிய தலைப்​புக்கு எதி​ராக, நாடு முழு​வதும் நேற்று போராட்​டங்​கள் நடந்​தன. உத்​தர பிரதேச மாநிலம் பிர​யாக் ​ராஜில் உள்ள சுபாஷ் சவுக்​கில், தயாரிப்​பாளர் நீரஜ் பாண்​டே, இயக்​குநர் ரித்​தேஷ் ஷா, மனோஜ் பாஜ்​பாய் ஆகியோரின் உரு​வப் பொம்​மை​கள் எரிக்​கப்​பட்​டன.

மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரில் நடந்த போராட்​டத்​தில் பரசுராம் சேனா என்ற அமைப்​பைச் சேர்ந்​தவர்​கள் படத்​தைத் தடை செய்ய வேண்​டும் என்று கோரிக்கை வைத்​தனர். கோரிக்கைகள் நிறைவேற்​றப்​ப​டா​விட்​டால் மனோஜ் பாஜ்​பாய், நீரஜ் பாண்டே ஆகியோரின் முகத்​தில் கரி பூசுவோம் என்று மிரட்டல் விடுத்தனர்.

‘கூஷ்​கோர் பண்​டட்’ பட தலைப்பு சர்ச்சை: மனோஜ் பாஜ்பாய், நீரஜ் உரு​வப் பொம்மைகள் எரிப்பு
Dear Men: இருண்ட உலகமும், சயானி போன்ற மீட்பர்களும்! - திரை தேவதைகள் 04

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in