தாதா - தி சவுரவ் கங்குலி ஸ்டோரி | கங்குலியின் வாழ்க்கை!

தாதா - தி சவுரவ் கங்குலி ஸ்டோரி | கங்குலியின் வாழ்க்கை!
Updated on
1 min read

திறமையான இளம் கிரிக்கெட் வீரராகத் தொடங்கி, இந்திய அணியின் செல் வாக்குமிக்க கேப்டன்களில் ஒருவராக உயர்ந்தவர் சவுரவ் கங்குலி. அவருடைய வாழ்க்கைப் பயணம் பாலிவுட்டில் படமாகி வருகிறது.

‘லூட்டேரா’, ‘டிராப்ட்’ இந்திப் படங்களை இயக்கிய விக்ரமாதித்ய மோட்வானே இப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்தி மட்டுமல்லாது தமிழ் உள்பட இந்தியாவின் பல மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்துக்கு ‘தாதா - தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

ஜூலை 8 கங்குலியின் பிறந்தநாள் என்பதால் படத்தின் அதிகாரபூர்வ முதல் தோற்றத்தை அன்று வெளியிட்டிருக்கிறார்கள். இதில் கங்குலியாக ராஜ்குமார் ராவ் தோன்றுகிறார்.

2002-இல் இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்வெஸ்ட் டிராபி வெற்றிக்குப் பிறகு, லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் சவுரவ் கங்குலி தனது ஜெர்சியைக் கழற்றி, சுழற்றி வீசிக் கொண்டாடிய மறக்க முடியாத தருணத்தை இந்த முதல் தோற்றத்தில் மீள் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

தாதா - தி சவுரவ் கங்குலி ஸ்டோரி | கங்குலியின் வாழ்க்கை!
காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்: செப்டம்பர் மாதத்துக்கான 37 டிஎம்சி நீரை கோரியது தமிழக அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in