

மணிப்பூரின் ‘பூங்’ திரைப்படம், இங்கிலாந்தின் பாஃப்டா விருது பெற்ற முதல் இந்திய திரைப்படமாகச் சாதனை படைத்துள்ளது.
லட்சுமிப்பிரியா தேவி இயக்கியுள்ள இப்படத்தில் குகன் கிப்கென், பாலா ஹிஜாம், விக்ரம் கோச்சார் உள்பட பலர் நடித்துள்ளனர். பர்ஹான் அக்தர் தயாரித்துள்ள இப்படத்தில் அறிமுக குழந்தை நட்சத்திரமான குகுன் கிப்கென் நடிப்பால் கவர்ந்துள்ளார்.
பள்ளி மாணவன் ஒருவன், காணாமல் போன தனது தந்தையைத் தேடுவதை மையமாகக் கொண்ட இப்படம், சர்வதேச பட விழாக்களில் பாராட்டுகளைப் பெற்றது.
இப்படம் பாஃப்டா விருதுக்குச் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்ப திரைப்பட பிரிவில் போட்டியிட்டது. இதில் ஹாலிவுட் படங்களை பின்னுக்குத் தள்ளி இப்படம் விருதை வென்றுள்ளது. பாஃப்டா விருதைப் பெற்ற முதல் இந்தியப் படம் இது.