

நடிகர் இம்ரான் ஹாஷ்மி
இந்தி சினிமாவில் பல ஹாரர் படங்களில் நடித்துள்ள இம்ரான் ஹாஷ்மி, மீண்டும் ‘ரூஹ்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதை மயங்க் ஷர்மா இயக்குகிறார். இப்படத்துக்கு இம்ரான் ஹாஷ்மி இசையும் அமைக்கிறார். குமார் தவுரானி, கிரிஷ் குமார், விக்ரம் கக்கர், சன்னி கன்னா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் இசை குறித்து பேசிய இம்ரான் ஹாஷ்மி, “எனது திரைப்படங்களுடன் ரசிகர்கள், உணர்வுப்பூர்வமாக இணைவதில் இசை எப்போதுமே முக்கியப் பங்கு வகித்துள்ளது. ‘ரூஹ்’ திரைப்படத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் வகையில், காதல், மர்மம் மற்றும் ஆழமான உணர்வுகள் நிறைந்த இசையை உருவாக்க விரும்புகிறோம்” என்றார்.