3 நாட்​களில் ரூ.500 கோடி - மிரட்டும் ‘துரந்தர் 2’ வசூல்

3 நாட்​களில் ரூ.500 கோடி - மிரட்டும் ‘துரந்தர் 2’ வசூல்
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங், சாரா அர்​ஜுன், மாதவன், அக் ஷய் கன்னா உள்பட பலர் நடித்த திரைப்​பட​மான, ‘துரந்தர்’ ரூ.1300 கோடிக்​கும் அதி​க​மாக வசூலித்து சாதனைப் படைத்​தது. ஆதித்யா தார் இயக்​கிய இந்த ஸ்பை த்ரில்​லர் படம், 2025-ம் ஆண்டு அதிக வசூல் செய்த இந்​திய திரைப்​படங்​களில் முதலிடத்​தில் உள்​ளது.

இப்​படத்​தின் அடுத்த பாகம் ‘துரந்​தர்: த ரிவெஞ்ச்’ என்று தலைப்​பில் கடந்த 19-ம் தேதி இந்​தி, தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளி​யானது. முதல் பாகம் வெற்​றி​பெற்​ற​தால், 2-ம் பாகத்​துக்​கும் அதிக எதிர்​பார்ப்பு இருந்​தது.

திரை பிரபலங்​களும் இப்​படத்​தைப் பாராட்டி கருத்து தெரி​வித்​திருப்​ப​தால் ஏராள​மானோர் இதைப் பார்க்க ஆர்​வம் காட்டி வரு​கின்​றன.

இந்​நிலை​யில் இப்​படம் முதல் நாளி​லேயே இந்​தி​யா​வில் மட்​டும் ரூ.100 கோடி வசூலித்​தது. வெளி​யான 3 நாட்​களில் மட்​டும் உலக அளவில் ரூ.500 கோடி வசூலித்​துள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இப்​படம் அதிக வசூலை அள்​ளும் என்​கிறார்​கள்.

3 நாட்​களில் ரூ.500 கோடி - மிரட்டும் ‘துரந்தர் 2’ வசூல்
Dhurandhar 2 - விமர்சனம்: ரத்தமும் வன்முறையும் நிறைந்த ஸ்பை த்ரில்லர் எப்படி?
3 நாட்​களில் ரூ.500 கோடி - மிரட்டும் ‘துரந்தர் 2’ வசூல்
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in