

ரன்வீர் சிங்
’டான் 3’ படத்தில் இருந்து விலகியிருக்கிறார் ரன்வீர் சிங். இதனால் புதிய நாயகன் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள ‘துரந்தர்’ திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை செய்து வருகிறது. 20 நாட்களில் ரூ.900 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள். இதர மொழி டப்பிங் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் 2-ம் பாகம் மார்ச் 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
‘துரந்தர்’ படத்தின் வெற்றியால் தனது அடுத்த படங்களின் வரிசையினை மாற்றியமைத்திருக்கிறார் ரன்வீர் சிங். ‘துரந்தர்’ படத்துக்குப் பிறகு ‘டான் 3’ படத்தில் நடிக்கவிருந்தார். தற்போது அதிலிருந்து விலகியிருக்கிறார். இவ்வளவு நாட்கள் நடைபெற்று வந்த முதற்கட்டப் பணிகள் அனைத்துமே வீணாகிப் போயிருக்கிறது. தற்போது ‘டான் 3’ படத்தின் புதிய நாயகன் யார் என்பதில் குழப்பம் நீடிக்கத் தொடங்கியிருக்கிறது.
’டான் 3’ படத்துக்கு பதிலாக ஜெய் மேத்தா இயக்கத்தில் உருவாகும் ‘ப்ராளே’ படத்தில் நடிக்கவுள்ளார். அப்ளாஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படம் ஜோம்பி வகை படமாகும். இப்படத்துக்குப் பிறகு எந்தப் படம் என்பது விரைவில் தெரியவரும்.