ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 4-வது முறையாக தனுஷ்!

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 4-வது முறையாக தனுஷ்!
Updated on: 
1 min read

ஆனந்த் எல்.ராய் இயக்​கும் திரைப்​படத்​தில் நடிகர் தனுஷ் 4-வது முறை​யாக நடிக்​கப் போவ​தாகத் தகவல் வெளியாகி​யுள்​ளது. பாலிவுட் இயக்​குநர் ஆனந்த் எல்.ராய் இயக்​கிய ‘ராஞ்​ஜனா’ என்ற படத்​தில் தனுஷ் கதாநாயக​னாக நடித்​திருந்​தார். ஏ.ஆர்.ரஹ்​மான் இசை அமைத்​திருந்த இந்​தப் படம் 2013-ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து அவர் இயக்​கத்​தில் ‘அத்​ரங்கி ரே’ என்ற படத்​தில் நடித்​திருந்​தார் தனுஷ். இதில் அக் ஷய்​குமார், சாரா அலிகான் என பலர் நடித்​திருந்​தனர். இப்​படம் 2021-ம் ஆண்டு வெளியானது.

பின்​னர், ‘தேரே இஷ்க் மே ’ என்ற படத்தை தனுஷ், கிருத்தி சனோன் நடிப்​பில் இயக்​கி​யிருந்​தார் ஆனந்த் எல்.ராய். இந்​நிலை​யில் இவர்​கள் புதிய படத்​தில் மீண்​டும் இணை​யப் போவ​தாகவும் இதன் படப்​படிப்பு அடுத்​தாண்டு மார்ச் மாதம் தொடங்க இருப்​ப​தாகவும் தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன. இது பீரியட், ஆக் ஷன் காதல் கதையாக உரு​வாக இருக்​கிறது.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 4-வது முறையாக தனுஷ்!
“என்ன ஒரு அற்புதமான நடிகை” - ‘மகாராஜா’ சாச்சனாவுக்கு ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் புகழாரம்

X