

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்த ‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த இப்படத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இதே டீம் மீண்டும் இணைகிறது. இயக்குநர் ஆனந்த் எல் ராய் அடுத்து வரலாற்றுப் பின்னணியில் ரொமான்ஸ் கதையை படமாக்க இருக்கிறார்.
அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருகின்றன. இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கீர்த்தி சனோன் நாயகியாக நடிக்கிறார். இருவருமே இப்படத்தில் நடிக்கச் சம்மதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வருட இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ‘ராஞ்ஜனா’, ‘அத்ரங்கி ரே’ ஆகிய படங்களில் ஏற்கெனவே நடித்திருக்கிறார் தனுஷ்.