மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட படங்களை பகிர்ந்த தீபிகா – ரன்வீர் தம்பதி

மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட படங்களை பகிர்ந்த தீபிகா – ரன்வீர் தம்பதி
Updated on
1 min read

ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே தம்பதி தங்கள் மகள் துவா-வின் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாட்ட படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த கருப்பு  வெள்ளைப் படங்களில் மூவரும் ஒரே மாதிரி வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்துள்ளனர். தீபிகா கருவுற்றிருக்கும் தனது வயிறு தெரியும்படியாக இருக்கிறார்.

படங்களைப் பகிர்ந்துள்ள ரன்வீர், ‘குழந்தை துவா மற்றும் எங்களின் மனங்கள் விரிவடைகின்றன. உங்களின் ஆசீர்வாதங்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த தம்பதி கடந்த 2024, செப்டம்பர் 8-ம் தேதி மூத்த மகள் துவா-வின் பிறப்பை இன்ஸ்டாகிராமில் ஒன்றாக அறிவித்தனர்.

அதேபோல் கடந்த ஏப்ரல் மாதத்தில், ‘இரண்டாவது குழந்தையை எதிர்பார்க்கிறோம்’ என்று சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தனர். அந்த அறிவிப்பு விரைவாக கவனம் பெற்றதுடன், ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகளும் குவிந்தன.   

அட்லி – அல்லு கூட்டணியின் ‘ராக்கா’ படத்தில் நடத்து முடித்துள்ள தீபிகா படுகோனே, சித்தார்த் ஆனந்தின் இயக்கத்தில்  ஷாருக் கான் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘கிங்’ படத்தில்  நடிக்க உள்ளார்.

ஆதித்ய தரின் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ படத்தில் நடித்திருந்த ரன்வீர். அடுத்து கல்யாணி பிரியதர்ஷனுடன் இணைந்து ‘ப்ரளய்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

மகளின் பிறந்தநாள் கொண்டாட்ட படங்களை பகிர்ந்த தீபிகா – ரன்வீர் தம்பதி
திரைத் தெறிப்புகள்: ஆஷா போஸ்லே கடைசி பாடல் முதல் ரவி மோகன் அறிவிப்பு வரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in