நாவலை காப்பியடித்ததாக நோட்டீஸ்: ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்

நாவலை காப்பியடித்ததாக நோட்டீஸ்: ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்
Updated on
1 min read

ஜான்வி கபூர், இஷான் கட்​டார், விஷால் ஜெத்வா என பலர் நடித்​துள்ள இந்தி திரைப்​படம், ‘ஹோம்பவுண்ட்’. நீரஜ் கேவான் இயக்​கி​யுள்ள இப்​படத்​தைக் கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரித்​துள்ளது.

செப்​.26-ம் தேதி வெளி​யான இப்​படம், பஷாரத் பீர் என்​பவர் தி நியூ​யார்க் டைம்ஸ் பத்​திரி​கை​யில் எழு​திய கட்​டுரை ஒன்​றின் அடிப்​படை​யில் உரு​வான​தாகக் கூறப்​பட்​டது.

பல்​வேறு சர்​வ​தேச திரைப்பட விழாக்​களில் விருது பெற்ற இப்​படம், இந்​தியா சார்​பில் ஆஸ்​கர் விருதுக்கு அதி​காரப்​பூர்​வ​மாக அனுப்​பப்​பட்​டது. சிறந்த வெளி​நாட்​டுப் பட பிரிவுக்​கான குறும் பட்​டியலிலும் இடம்​பெற்​றுள்​ளது.

இந்​நிலை​யில் இந்​தப் படம் தனது நாவலைக் காப்பியடித்து உரு​வாக்​கப்​பட்​டது என்று பத்​திரி​கை​யாளரும் எழுத்​தாள​ரு​மான பூஜா சாங்​கோய்​வாலா என்​பவர் தர்மா புரொடக்​ ஷன்ஸ் மற்​றும் நெட்​பிளிக்ஸ் நிறு​வனத்​துக்கு நோட்​டீஸ் அனுப்​பி​யுள்​ளார்.

2021-ம் ஆண்​டு, தான் எழு​திய இதே பெயரிலான நாவலை அடிப்படை​யாகக் கொண்டே இப்​படம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது என்று அவர் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். “எனது நாவலின் கதை, 2020-ம் ஆண்டு பெருந்​தொற்​றின்​போது புலம்​பெயர்ந்​தவர்​களைப் பற்​றியது​தான்.

படத்​தைப் பார்த்​த​போது, எனது புத்​தகத்​தின் தலைப்​பைப் பயன்​படுத்​தி​யது மட்​டுமல்​லாமல், படத்​தின் இரண்​டாம் பாகத்​தில், எனது நாவலின் காட்​சிகள், உரை​யாடல், கதை அமைப்பு உள்​ளிட்ட பல சம்​பவங்​களை அப்​படியே எடுத்​திருப்​பதை அறிந்​தேன்” என்று தெரி​வித்​துள்ள அவர், மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் இது தொடர்​பாக வழக்​குத் தொடர இருப்​ப​தாக​வும் அதற்கு முன் தனது வழக்​கறிஞர் நோட்​டீஸ் அனுப்பி இருப்​ப​தாக​வும்​ தெரி​வித்​துள்​ளார்​.

நாவலை காப்பியடித்ததாக நோட்டீஸ்: ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட ‘ஹோம்பவுண்ட்’ படத்துக்கு சிக்கல்
முருகனை பற்றிய கதையில் அல்லு அர்ஜுன்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in