கங்கனாவின் ‘குயின் 2’-வுக்கு எதிராக ரூ.250 கோடி நஷ்டஈடு கோரி வழக்கு

நடிகையும் எம்.பியுமான கங்கனா

நடிகையும் எம்.பியுமான கங்கனா

Updated on
1 min read

நடிகை கங்​கனா நடித்து சூப்​பர் ஹிட்​டான இந்​திப் படம், ‘கு​யின்’. இப்​படத்​துக்​காக அவர் தேசிய விருது பெற்​றிருந்​தார். இப்​படத்தை வயா​காம் 18 மோஷன் பிக்​சர்​ஸ், பாண்​டம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்​தது.

இந்​நிலை​யில் இப்​படத்​தின் 2-ம் பாகம் இப்​போது உருவாகியுள்ளது. சமீபத்​தில் இதன் படப்​பிடிப்பு நிறைவடைந்​து, போஸ்ட் புரொடக் ஷன் பணி​கள் நடந்து வரு​கின்​றன. இதற்கிடையே இப்​படத்​தைத் தயாரிக்​கும் ஜியோஸ்​டார் நிறுவனத்​துக்கு எதி​ராக, மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் ரூ.250 கோடி நஷ்டஈடு கோரி பாண்​டம் ஸ்டூடியோஸ் வழக்கு தொடர்ந்துள்​ளது.

‘கு​யின்’ படத்​தின் 50 சதவீத அறி​வு​சார் சொத்​துரிமை தங்​களிடம் உள்​ள​தாக​வும் படத்​தின் அடுத்த பாகம், தழு​வல் அல்​லது அது சார்ந்த பிற படைப்​பு​களை உரு​வாக்​கு​வதற்கு தாங்​கள் எந்த அனும​தி​யும் வழங்​க​வில்லை என்​றும் அந்த நிறு​வனம் தெரிவித்துள்ளது.

படப்​பிடிப்பு தொடங்​கு​வதற்கு முன்பே இது குறித்து பொது அறிவிப்பு மற்​றும் எச்​சரிக்​கைகளை தங்​கள் நிறு​வனம் அனுப்பியதாக​வும், சமரச பேச்​சு​வார்த்​தைக்கு ஜியோஸ்​டார், இயக்​குநர் விகாஸ் பால் சம்மதிக்காததால் நீதி​மன்​றத்தை நாட வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ள​தாக​வும் பாண்​டம் ஸ்டூடியோஸ் தரப்​பில் தெரிவிக்​கப்பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p><em>நடிகையும் எம்.பியுமான கங்கனா</em></p></div>
புனேவில் மாநகராட்சி அலுவலகம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கிய 10 பேரை மீட்கும் பணி தீவிரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in