‘ஹனு​மன் அன்ஸ்’ படத்தை நிராகரித்த பாலிவுட் இப்​போது மன்னிப்​புக் கேட்​கிறது: இணை தயாரிப்பாளர் தகவல்

‘ஹனு​மன் அன்ஸ்’ படத்தை நிராகரித்த பாலிவுட் இப்​போது மன்னிப்​புக் கேட்​கிறது: இணை தயாரிப்பாளர் தகவல்
Updated on: 
1 min read

வட இந்​தி​யச் சித்​த​ரான நீம் கரோலி பாபா என்ற மகா​ராஜ் ஜியின் வாழ்க்​கைக் கதையை மைய​மாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இந்தி திரைப்​படம் ‘ஹனு​மன் அன்​ஸ்’. விஷால் சதுர்​வேதி இயக்கியுள்ள இப்​படத்தை ராகிணி, நம்​ரதா ஜி.சிங், அனுப்​பிரியா ஆகிய 3 பெண்​கள் தயாரித்​துள்​ளனர். இப்​படம் நீம் கரோலி பாபாவின் வாழ்க்கை மற்​றும் போதனை​களை அடிப்​படை​யாகக் கொண்டது.

ரூ.2 கோடி​யில் உரு​வாக்​கப்​பட்ட இப்​படம் இந்​தி​யா​வில் இது​வரை ரூ.345 கோடிக்கு மேல் வசூலித்து ஓடிக் கொண்​டிருக்​கிறது. இப்படம் முதலில், போஸ்ட் புரொடக் ஷனுக்கு பணமில்​லாமல் தள்ளிப்​போய்க் கொண்​டிருந்​தது. அப்​போது தனது மொத்த சேமிப்பைக் கொடுத்து இணை தயாரிப்​பாளர் ஆனார், 21 வயதான அனுப்​பிரி​யா.

அவர் கூறும்​போது, “நான் இப்​படத்​தில் இணைவதற்கு முன்பிருந்தே, ‘ஹனு​மன் அன்​ஸ்’ குழு​வினர் படப்​பிடிப்​புக்​குப் பிந்தைய பணி​களுக்​கான முதலீட்​டுக்​குப் பலரை அணுகினர். அது பெரிய முதலீடு தேவைப்​படும் படம் இல்லை என்​றாலும், யாரும் முன் வரவில்​லை. இப்​படத்தை அவர்​கள் நம்​ப​வில்​லை. பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​தாது என்று நினைத்​தார்​கள். இப்போது படம் வெற்றி பெற்ற பிறகு பல தயாரிப்​பாளர்​கள் எங்களைத் தொடர்பு கொண்டு பாராட்​டி​னார்​கள்.

சிலர்​, ‘மன்​னிப்பு கேட்​டுக் கொள்​கிறோம்; இந்​தப் படம் முதலில் எங்​களிடம் வந்​தது. உங்​களு​டன் இணைய முடி​யாமல் போனதற்கு வருந்​துகிறோம். அது நாங்​கள் செய்த மிகப்​பெரிய தவறு’ என்று கூறி​னார்​கள். “சிறு பட்​ஜெட் படத்​தால் இவ்​வளவு பெரிய விஷயங்களைச் சாதிக்க முடி​யும் என்​பதை நீங்​கள் உணர்த்தி இருக்​கிறீர்​கள்; திரை​யுல​குக்கு ஒரு பாடத்​தையே கற்​றுக்​கொடுத்துள்​ளீர்​கள். உங்​களுக்கு இப்​போது என்ன தேவை என்றாலும் உங்​களுடன் துணை நிற்​போம் என்​றார்​கள்’’ எனக் கூறியுள்​ளார்​.

‘ஹனு​மன் அன்ஸ்’ படத்தை நிராகரித்த பாலிவுட் இப்​போது மன்னிப்​புக் கேட்​கிறது: இணை தயாரிப்பாளர் தகவல்
அக்.31-க்குள் மீட்டர் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் போராட்டம்: ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in