அக்.31-க்குள் மீட்டர் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் போராட்டம்: ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தகவல்

அக்.31-க்குள் மீட்டர் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் போராட்டம்: ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தகவல்
Updated on: 
1 min read

சென்னை: அக்.31-ம் தேதிக்குள் மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றால் தீவிர போராட்டம் நடத்தப்படும் என அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நேற்று (செப்.26-ம் தேதி) கோட்டை நோக்கி பேரணி செல்லும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் போக்குவரத்து ஆணையர் மற்றும் அதிகாரிகள் ஆட்டோ தொழிற்சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்த அதிகாரிகள் போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் எஃப்சிக்கு (FC) செல்லும் ஆட்டோக்களுக்கு ரிப்லெக்டர் ஸ்டிக்கர்களை, குறிப்பிட்ட நபரிடம் மட்டுமே ஒட்ட வேண்டும் என்ற நடைமுறையைத் தளர்த்தி, தரமான ஸ்டிக்கர்களை எங்கு வேண்டுமானாலும் ஒட்டிக்கொண்டு வரலாம்.

எஃப்சிக்கு வரும் ஆட்டோக்களை புகைப்படம் எடுத்து, அதை இணையத்தில் பதிவேற்றம் செய்து இணையச் சான்று வாங்க வேண்டுமென்ற நடைமுறையை நீக்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் கோட்டை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு ஒத்திவைத்துள்ளது.

வரும் அக்.31-ம் தேதிக்குள் ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி அறிவிக்காவிட்டால், கூட்டமைப்பு சார்பில் வலிமையான, தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்து ஆட்டோ தொழிற் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அக்.31-க்குள் மீட்டர் கட்டணத்தை உயர்த்தாவிட்டால் போராட்டம்: ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு தகவல்
குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in