பிப்.27-ல் வெளியாகிறது ‘பியாண்ட் த கேரளா ஸ்டோரி’

பிப்.27-ல் வெளியாகிறது ‘பியாண்ட் த கேரளா ஸ்டோரி’
Updated on
1 min read

சு​திப்டோ சென் இயக்​கத்​தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளி​யான படம், ‘கேரளா ஸ்டோரி’. கேரளா​வில் இளம்​பெண்​களை மதமாற்​றம் செய்து அவர்களைத் தீவிர​வா​தி​களின் பாலியல் அடிமை​களாகப் பயன்​படுத்​து​வ​தாக அந்​தப் படத்​தில் காட்​சிகள் இடம்​பெற்​றன. அந்​தப் படத்​துக்கு கடும் எதிர்ப்பு கிளம்​பியது. சில மாநிலங்​களில் தடை செய்​யப்​பட்​டது.

இந்​நிலை​யில் அந்​தப் படத்​தின் அடுத்த பாக​மாக ‘பி​யாண்ட் த கேரளா ஸ்டோரி’ என்ற படம் உரு​வாகி வரு​கிறது. இதை ‘கேரளா ஸ்டோரி’ படத்​தைத் தயாரித்த விபுல் அம்​ருத்​லால் ஷா தயாரிக்கிறார். இப்​படக்​குழு வீடியோஒன்றை வெளி​யிட்​டுள்​ளது. அதில், “அது வெறும் கதை​தான்என்று சொன்​னார்​கள். அதை நம்​பகத்​தன்​மையற்​ற​தாக மாற்ற முயன்​றார்​கள்.

ஆனால் உண்​மையை நிறுத்த முடி​யாது. ஏனென்​றால் சில கதைகள் ஒரு​போதும் முடிவடைவ​தில்​லை. இந்த முறை, இக்​கதை உங்​களை இன்​னும் அதி​க​மாகக் காயப்​படுத்​தும்’’ என்று கூறி​யுள்​ளனர்.

இப்​படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்​கு​கிறார். நடிகர், நடிகைகள் மற்​றும் தொழில்​நுட்ப கலைஞர்​கள் பற்​றிய விவரத்தை படக்​குழு வெளி​யிட​வில்​லை. பிப்​.27-ம்தேதி இப்​படம் வெளி​யாகும் என்​றும் அறி​வித்​துள்​ளனர். இதன் படப்​பிடிப்பு கேரளா​வில்​ நடந்​து வரு​கிறது.

பிப்.27-ல் வெளியாகிறது ‘பியாண்ட் த கேரளா ஸ்டோரி’
'ஜனநாயகன்' ஹைப் எதிரொலி: ஓடிடியில் ட்ரெண்ட் ஆகும் 'பகவந்த் கேசரி'

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in