மீரா நாயர் இயக்​கும் பயோபிக்கில் அஞ்​சலி சிவராமன்

மீரா நாயர் இயக்​கும் பயோபிக்கில் அஞ்​சலி சிவராமன்
Updated on
1 min read

இந்​தி​யா​வில் நவீன ஓவிய முன்​னோடி​யாகக் கருதப்​படு​பவர் அம்ரிதா ஷெர்​-கில். ஹங்​கேரி நாட்​டின் புடாபெஸ்ட் நகரில் பிறந்த இவரது தந்​தை, உம்​ராவ் சிங் ஷெர்​-கில் சீக்​கியர். தாய் ஹங்​கேரியை சேர்ந்​தவர்.

ஆரம்​பத்​தில் மேற்​கத்​திய பாணி​யில் ஓவி​யங்​களை வரைந்து வந்த அம்​ரிதா ஷெர்​-கில், 1934-ல் இந்​தியா திரும்​பிய பிறகு இந்தியக் கலைகளின் மீது, குறிப்​பாக அஜந்தா மற்​றும் முகலாயக் கலைகளால் ஈர்க்​கப்​பட்​டார். அம்​ரி​தா​வின் ஓவி​யங்​கள் பெரும்பாலும் சாதாரண மனிதர்​களின் வாழ்க்​கை​யை​யும், கிராமப் ​புற இந்​தி​யப் பெண்​களின் மனநிலை​யை​யும் படம்​பிடித்துக் காட்​டின.

இவர் 1941-ம் ஆண்டு தனது 28-வது வயதில் கராச்​சி​யில் காலமானார். இவருடைய வாழ்க்​கைக் கதை திரைப்​பட​மாகிறது. இதை ‘சலாம் பாம்​பே’, ‘மான்​சூன் வெட்​டிங்​’​ போன்ற புகழ்​பெற்ற படங்​களை இயக்​கிய மீரா நாயர் இயக்​கு​கிறார். இதில் அம்​ரிதா ஷெர்​-கில்​-லாக அஞ்​சலி சிவ​ராமன் நடிக்​கிறார். இவர் தமிழில் ‘பேட் கேர்ள்’ படத்​தில் நடித்​தவர்.

நெட் ​பிளிக்​ஸில் வெளி​யான ‘கிளாஸ்’ என்ற தொடரிலும் நடித்துள்ளார். நூற்​றுக்​கும் மேற்​பட்​டோரை ஆடிஷன் செய்​த​தில் அம்​ரி​தா​வின் தோற்​றம் அஞ்​சலிக்கு பொருந்​தி​ய​தால் அவரை தேர்வு செய்​துள்​ளனர். இப்​படத்​தில் பிரி​யங்கா சோப்​ரா, ஜெய்​தீப், ஜிம் சரப் உள்பட பலர் நடிக்​கின்​றனர். இதன் படப்​பிடிப்பு ஹங்கேரி, பிரான்ஸ் உள்​ளிட்ட பகு​தி​களில் நடை​பெற இருக்கிறது.

மீரா நாயர் இயக்​கும் பயோபிக்கில் அஞ்​சலி சிவராமன்
Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in