ஆபரேஷன் சிந்​தூர் பின்னணியில் அர்​ஜுன் இயக்கும் படம்! - ராமஜென்ம பூமியில் பூஜை

ஆபரேஷன் சிந்​தூர் பின்னணியில் அர்​ஜுன் இயக்கும் படம்! - ராமஜென்ம பூமியில் பூஜை
Updated on: 
1 min read

காஷ்மீரின் பஹல்​காம் பகுதி​யில் கடந்த ஆண்டு ஏப்​ரலில் தீவிரவாதி​கள் நடத்​திய தாக்​குதலில் 26 சுற்​றுலா பயணிகள் கொல்​லப்​பட்​டனர். இந்​தச் சம்​பவம் இந்​தியா முழு​வதும் அதிர்ச்சியை ஏற்​படுத்​தி​யது. இதற்​குப் பதிலடி கொடுக்​கும் விதமாக ‘ஆபரேஷன் சிந்​தூர்’ என்ற பெயரில், பாகிஸ்​தான் மற்றும் பாகிஸ்​தான் ஆக்​கிரமிப்பு காஷ்​மீர் பகுதியின் தீவிர​வாத முகாம்​களில் இந்​திய பாது​காப்​புப் படை அதிரடி​யான தாக்குதலை நடத்​தி​யது.

இந்​தச் சம்​பவத்​தின் பின்​னணி​யில் உரு​வாகும் திரைப்​படத்தை நடிகர் அர்​ஜுன் இயக்​கு​கிறார். இதை பிரசிடென்​ஷியல் மூவீஸ் இன்​டர்​நேஷனல் சார்​பில் அனூப் மோகன் தயாரிக்​கிறார். ஓய்வுபெற்ற ராணுவ அதி​காரி மேஜர் விஜய் பார்​கவ் இதன் கதையை எழுதி​யுள்​ளார். இப்​படத்​தின் தொடக்க விழா அயோத்தியில் ராமஜென்ம பூமி​யில் நடை​பெற்​றது. இதில் அர்ஜுனுடன் அவரது மனைவி நிவேதிதா உள்​பட பல்​வேறு துறைகளைச் சேர்ந்த முக்​கியப் பிர​முகர்​களும் பங்​கேற்​றனர். ராம ஜென்​மபூமி தீர்த்த க்ஷேத்​திரத்​தில், பூஜை நடத்​தப்​பட்ட முதல் திரைப்​படம் இது என்​று படக்​குழு​வினர் தெரி​வித்​துள்​ளனர்.

“வழக்​க​மான கமர்​ஷியல் சினிமாவின் எல்லைகளைத் தாண்டி, ஒட்​டுமொத்த தேசத்​துக்​கும் ஒரு காணிக்​கை​யாக இப்​படத்தை உரு​வாக்க இருக்​கிறோம். பிரம்​மாண்​டம், உள்​ளடக்​கம், உணர்வு, நம்​பகத்​தன்மை ஆகிய அனைத்​தும் கொண்ட திரை அனுபவ​மாக இப்​படம் இருக்​கும். ராணுவப் பணி​யின் யதார்த்​தம், தியாகம், தேசப் பாது​காப்பு ஆகியவை குறித்து இப்​படம் பேசும். இந்​தி​யில் பிரம்​மாண்​ட​மாக உரு​வாகும் இப்​படம் 9 மொழிகளில் வெளியாக இருக்​கிறது. படத்​தின் தலைப்பு ரகசி​ய​மாக வைக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தி​யாவின் 81-வது சுதந்​திர தினமான 2027-ம் ஆண்டு ஆக.15 அன்று படத்தை வெளி​யிட முடிவு செய்​துள்​ளோம்” என்று படக்​குழு தெரி​வித்​துள்​ளது.

ஆபரேஷன் சிந்​தூர் பின்னணியில் அர்​ஜுன் இயக்கும் படம்! - ராமஜென்ம பூமியில் பூஜை
‘நவோரியா’ என்ற தலைப்பு ஏன்?

X