ஓய்வை அறிவித்தார் பாடகர் அரிஜித் சிங் - ரசிகர்கள் அதிர்ச்சி!

ஓய்வை அறிவித்தார் பாடகர் அரிஜித் சிங் - ரசிகர்கள் அதிர்ச்சி!
Updated on
1 min read

பாலிவுட்டின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் அரிஜித் சிங், இசைத் துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த திடீர் அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இனி வரும் காலங்களில் புதிய திரைப்படப் பாடல்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடப் போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த10 ஆண்டுகளுக்கு மேலாக இந்தி சினிமாவின் முக்கிய பாடகராக திகழ்ந்தவர் அரிஜித் சிங். ‘ஆஷிகி 2’ படத்தின் ‘தும் ஹி ஹோ’ பாடல் தொடங்கி, சமீபத்திய பல ஹிட் பாடல்கள் வரை இவரது குரலுக்கு மயங்காத ரசிகர்கள் இல்லை.

பாலிவுட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பாடகர்கள் பிரபலமாக இருப்பார்கள். முஹம்மது ரஃபி, கிஷோர் குமார், முகேஷ், உதித் நாராயணன், குமார் சானு ஆகியோரின் வரிசையில் தாராளமாக அரிஜித் சிங்கை சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த தலைமுறையை தன் வசீகரக் குரலால் கட்டிப் போட்டவர். அரிஜித் சிங் பாடினால் அந்த பாடல் சூப்பர்ஹிட் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன.

தனது திரை இசைப் பயணத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் திடீரென அறிவித்துள்ளார் அரிஜித் சிங். இது குறித்து அவர் விரிவான காரணங்களைக் கூறவில்லை என்றாலும், கலை சார்ந்த மற்ற புதிய முயற்சிகளில் கவனம் செலுத்த அவர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அரிஜித் சிங்கின் இந்தத் திடீர் முடிவு பாலிவுட் இசையமைப்பாளர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் முழுக்க பலரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பழைய பாடல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பாரா என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஓய்வை அறிவித்தார் பாடகர் அரிஜித் சிங் - ரசிகர்கள் அதிர்ச்சி!
‘ஜனநாயகன்’ ரிலீஸில் மீண்டும் சிக்கல்: தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in