​பாலிவுட்​டில் அறி​முக​ம் ஆகிறார் அனுபமா பரமேஸ்வரன்!

​பாலிவுட்​டில் அறி​முக​ம் ஆகிறார் அனுபமா பரமேஸ்வரன்!
Updated on
1 min read

தமிழில் கொடி, தள்​ளிப் போகாதே, சைரன், டிராகன், பைசன், லாக்​ட​வுன் உள்பட பல படங்​களில் நடித்​தவர் அனுபமா பரமேஸ்வரன். மலை​யாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வரு​கிறார். இவர் இப்​போது சைக்காலஜிக்​கல் த்ரில்​லர் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இதை ஷான் இயக்​கு​கிறார்.

பாலிவுட்​டில் ரஸ்​டம், டாய்​லெட்: ஏக் பிரேம் கதா, பேட் மேன் ஆகிய படங்​களைத் தயாரித்த பிரேர்னா அரோ​ரா, ஷிவின்நரங், கிரண் ஆகியோ​ருடன் இணைந்து தயாரிக்கிறார். இந்​தி​யில் உரு​வாகும் இப்​படம் மூலம் அனுபமா பாலிவுட்​டில் அறி​முக​மாகிறார்.

இப்​படம் தமிழ், தெலுங்​கு, மலை​யாள மொழிகளி​லும் வெளி​யாக இருக்​கிறது. படப்​பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்​கிறது. பிரேர்னா அரோரா கூறும்​போது, “அனுபமா பரமேஸ்​வரனுடன் இணைவதைச் சிறப்​பான​தாக உணர்கிறேன். பல மொழிகளில் நடித்து வரும் அவர் திறமையை பாராட்​டி​யுள்​ளேன். இந்​தப்படம் ஒரு நடிகையாக அவருக்​குச் சிறப்பானதாக இருக்​கும்” என்றார்.

​பாலிவுட்​டில் அறி​முக​ம் ஆகிறார் அனுபமா பரமேஸ்வரன்!
“மீண்டும் ஆட்சிக்கு வருவோம்; மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவோம்​” - முதல்வர் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in