அயோத்தி​யில் தர்மசாலா கட்டுகிறார் அமிதாப்​

அயோத்தி​யில் தர்மசாலா கட்டுகிறார் அமிதாப்​
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தற்​போது ‘கல்கி 2898 ஏடி: பார்ட் 2’ உள்பட சில படங்​களில் நடித்து வரு​கிறார். தொலைக்காட்​சி​யில் ‘கோன் பனேகா குரோர்​ப​தி’ நிகழ்ச்சியையும் நடத்தி வரு​கிறார்.

இந்​நிலை​யில் தனது தந்​தை​யும் பிரபல இந்தி கவிஞரு​மான டாக்டர் ஹரிவன்ஷ் ராய் பச்​சன் நினை​வாக, அயோத்​தி​யில் தர்மசாலா கட்​டத் திட்​ட​மிட்​டுள்​ளார். இதில் 20-க்​கும் மேற்​பட்ட அறை​கள் இடம்​பெற உள்​ளன. பக்​தர்​கள் தங்​கு​வதற்​கும் அவர்​களுக்​குத் தேவை​யான வசதி​களை வழங்​கு​வதற்​கும் இந்த இடம் பயன்​படுத்​தப்​படும் என்று கூறப்​படு​கிறது.

இந்த தர்மசாலா, அயோத்தி​யின் தசரத் பாத் பகு​தி​யில் உள்ள தி சரயு திட்​டத்​தின் கீழ் அமி​தாப் பச்​சன் வாங்​கிய நிலத்​தில் அமைய உள்​ளது. ரூ.15 கோடி மதிப்​பில் இந்த நிலத்தை வாங்​கி​யிருந்​தார் அவர். இதற்​கான கட்​டிட வரைபட அனு​ம​திக்​காக அயோத்தி மேம்பாட்டு ஆணை​யத்​திடம் விண்​ணப்​பம் அளிக்​கப் பட்​டுள்​ளது. அனுமதி கிடைத்த பின் அக்​டோபரில் கட்​டு​மானப் பணி​கள் தொடங்​கும் என்று கூறப்​படு​கிறது.

அயோத்தி​யில் தர்மசாலா கட்டுகிறார் அமிதாப்​
Sarvam Maya: டெலுலுவின் துணையும், ஆன்மாக்கள் தரும் ஆறுதலும் | திரை தேவதைகள் 35

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in