“இன்​ஸ்​டா​வில் போட்டோ போடுவதற்​காக உங்களை வருத்திக்கொள்ள வேண்​டாம்” - இளம் பெண்​களுக்கு டாப்ஸி எச்சரிக்கை

“இன்​ஸ்​டா​வில் போட்டோ போடுவதற்​காக உங்களை வருத்திக்கொள்ள வேண்​டாம்” -  இளம் பெண்​களுக்கு டாப்ஸி எச்சரிக்கை
Updated on
1 min read

நடிகை டாப்​ஸி, இப்​போது இந்தி திரைப்​படங்​களில் நடித்​து​வருகிறார். அனுபவ் சின்கா இயக்​கத்​தில் அவர் நடித்த ‘அஸி’ என்ற திரைப்​படம் கடந்த பிப்​ர​வரி மாதம் வெளி​யானது.

மேலும் 2 திரைப்​படங்களில் நடித்து வரு​கிறார். இதற்​கிடையே, அவர் தனது இஸ்​டாகி​ராம் ஸ்டோரி​யில், ஃபிட்​டான புகைப்​படங்களைப் போடு​வதற்​காக தயவுசெய்து உங்​களை நீங்​களே வருத்திக் கொள்​ளாதீர்கள்” என்று இளம் பெண்​களுக்கு எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “வள​ரும் பரு​வத்​தில் நான் ஆரோக்கிய​மாகவே இருந்​தேன். ஆனாலும் என் அடிவ​யிற்​றில் மட்​டும் ஏன் எப்​போதும் கொழுப்பு இருக்​கிறது என்​பது புரிய​வில்​லை. அதைக் குறைக்க வேண்​டும் என்​ப​தற்​காக, என் சக்​தி​யை​யும் மீறி கடுமையாக உடற்​ப​யிற்சி செய்​தேன்.

நாம் உடலை அளவுக்கு அதி​க​மாக வருத்​தும்​போது, ‘உடலுக்​குப் பாது​காப்பு தேவை’ என்​கிற எச்​சரிக்கை சிக்​னலை நம் மூளை கொடுத்துவிடும். இதனால், உடல் எடை குறைவதற்​குப் பதிலாக, உடல் தண்​ணீரைத் தக்​க வைக்க ஆரம்​பித்​து​விடும். இதனால் அந்த அடிவ​யிற்​றுச் சதை இன்​னும் அதி​கரிக்​கவே செய்​யும். அதனால் இதைப் பெண்​கள் செய்​யக் கூடாது. ஒவ்​வொரு பெண்ணின் உடலமைப்​பும் வெவ்​வேறானது.

ஒரு பெண்​ணின் உடல் பல ஹார்​மோன் மாற்​றங்​களைக் கடந்து செல்​வ​தால், தின​மும் வயிறு, ஒரே மாதிரி தட்டையாக இருக்க வேண்​டும் என்று எதிர்​பார்க்​கக் கூடாது. நான் என்​னைச் ‘சித்ரவதை’ செய்து கொண்ட பிறகே தாமத​மாக இதைப் புரிந்து கொண்​டேன். என்​னுடைய ஊட்​டச் சத்து நிபுணர்​தான் எனக்கு இதை விளக்​கி​னார்.

பெண்​களின் அடி வ​யிற்​றுப் பகு​தி​யில் தான் இனப்​பெருக்க உறுப்பு​கள் உள்​ளன. அவற்​றைப் பாது​காக்க அந்​தப் பகு​தி​யில் சிறிதளவு கொழுப்பு இருப்​பது மிக​வும் அவசி​யம். எனவே, இன்ஸ்டாகி​ராமில் ஃபிட்​டான புகைப்​ படங்​களைப் போடுவதற்காக தயவு செய்து உங்​களை நீங்​களே வருத்திக் கொள்​ளாதீர்​கள்” என்று கூறி​யுள்​ளார்.

“இன்​ஸ்​டா​வில் போட்டோ போடுவதற்​காக உங்களை வருத்திக்கொள்ள வேண்​டாம்” -  இளம் பெண்​களுக்கு டாப்ஸி எச்சரிக்கை
MAI: கடந்து போகும் காதலில் ‘மய்’ பகிரும் பிரேக்-அப் பாடம் | திரை தேவதைகள் 19

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in