மோசமான சாலைகளால் மன அழுத்தம்: நடிகை சுதா சந்திரன் வருத்தம்

மோசமான சாலைகளால் மன அழுத்தம்: நடிகை சுதா சந்திரன் வருத்தம்
Updated on
1 min read

மும்பையின் மோசமான சாலைகளால் தனது தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுவதாக நடிகையும் நடனக் கலைஞருமான சுதா சந்திரன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "படப் பிடிப்புத் தளத்துக்கு நான் ஒருபோதும் தாமதமாகச் செல்வதில்லை. ஆனால் இப்போதெல்லாம், சாலைகளின் மோசமான நிலை காரணமாக, அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்கள் தாமதமாகச் சென்று சேர்கிறேன்; இது எனது தயாரிப்பாளருக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. வேலைகளும் தாமதமாகின்றன.

கூடவே, மன அழுத்தமும் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருப்பதால், ஒரே இடத்தில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை நகர முடியாமல் சிக்கிக் கொள்ளும் நிலை இருக்கிறது; அந்தச் சூழலில் மாற்றுப் பாதையைத் தேர்ந்தெடுக்க வழி இருப்பதில்லை. ஓராண்டுக்குப் பிறகு நான் ‘மத் ஐலேண்ட்’-டுக்குச் சென்றேன். அங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதைப் புரிந்துகொண்டாலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ யாரும் இல்லை. அதுவே முக்கிய பிரச்சினைக்கு காரணம். இப்போது ஒரு கதையில் என் கதாபாத்திரத்தைக் கேட்பதை விட, படப்பிடிப்பு நடைபெறும் இடம் எது என்பதையே அதிகம் விசாரிக்கிறேன். பயணத்தில் ஏற்படும் சிரமங்கள் காரணமாக, என்னால் பல வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மோசமான சாலைகளால் மன அழுத்தம்: நடிகை சுதா சந்திரன் வருத்தம்
அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் அனுஷ்கா சர்மா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in