நடனக் காட்சியில் விபத்து: ஷ்ரத்தா கபூருக்கு காலில் எலும்பு முறிவு

நடனக் காட்சியில் விபத்து: ஷ்ரத்தா கபூருக்கு காலில் எலும்பு முறிவு
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர். ‘ஆஷிகி 2’, ‘ஏக்தா வில்​லன்’, ‘பாஹி’, ‘ஸ்​திரீ 2’, பிர​பாஸ் ஹீரோ​வாக நடித்த ‘சாஹோ’ ஆகிய படங்​களில் நடித்​துள்​ளார்.

இப்​போது ‘ஈதா’ என்ற படத்​தில் நடித்து வரு​கிறார். இது, பிரபல மராத்தி நடனக் கலைஞரும் பாடகி​யு​மான விதா​பாய் பாவ் மங் நாராயண்​காங்​கர் என்​பவர் வாழ்க்கை கதையைக் கொண்ட படம். லக்‌ஷமண் உடேகர் இயக்​கும் இப்​படத்​துக்​காக, லாவணி பாடல் காட்​சி​யைப் படமாக்கி வந்​தனர்.

அப்​போது வேக​மான நடன அசைவு​களில் ஷ்ரத்தா கபூர் ஆடிக்​கொண்​டிருந்​தார். கால் விரலை ஊன்றி ஆட வேண்​டிய காட்சி என்​ப​தால் ரிஸ்க் எடுத்து ஆடிய​போது, எதிர்​பா​ராத​வித​மாக அவர் காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. உடனடி​யாக அவரை அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்று சிகிச்சை அளித்​தனர். இச்​சம்​பவத்​தால் படப்​பிடிப்​பு நிறுத்​தப்​பட்​டது.

நடனக் காட்சியில் விபத்து: ஷ்ரத்தா கபூருக்கு காலில் எலும்பு முறிவு
“கதை கேட்காமல் ஒப்பந்தமான ஒரே படம்!” - ராஷி கன்னா தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in