சாய் பல்​லவி நடிக்​கும் ‘ராமாயணம்’ படத்துக்கு துபாயில் பிரீமியர் நிகழ்ச்சி

நடிகை சாய் பல்​லவி

நடிகை சாய் பல்​லவி

Updated on
1 min read

நிதேஷ் திவாரி இயக்​கத்​தில் ராமாயணக் கதை திரைப்​பட​மாகி இருக்​கிறது. இதில் இந்தி நடிகர் ரன்​பீர் கபூர் ராம​ராக​வும் சாய் பல்லவி சீதை​யாக​வும் நடித்​துள்​ளனர். ராவண​னாக யாஷ் நடித்துள்ளார். அனு​ம​னாக சன்னி தியோல், லட்​சுமண​னாக ரவி துபே என பலர் நடித்​துள்​ளனர்.

ஆங்​கிலம், இந்​தி, தமிழ், தெலுங்கு என பல்​வேறு மொழிகளில் உருவாகியுள்ள இப்​படத்​தின் முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாகிறது. 2-வது பாகம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருக்​கிறது. பிரம்​மாண்ட பட்​ஜெட்​டில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​தின் சர்​வ​தேச பிரீமியர் நிகழ்ச்சி கடந்த ஏப்​ரல் மாதம் துபா​யில் நடை​பெற இருந்​தது.

மேற்​காசி​யா​வில் நில​விய போர் பதற்​றம் காரண​மாக, அந்​தத் திட்டம் ஒத்​திவைக்​கப்​பட்​டது. தற்​போது அங்கு நிலைமை சீரடைந்துள்ளதால், துபா​யில் பிரம்​மாண்ட பிரீமியர் நிகழ்ச்​சியை நடத்த முடிவு செய்​யப்பட்​டுள்​ளது. இதற்​காகத் துபா​யில் உள்ள பல்வேறு அரங்​கு​கள் ஆய்வு செய்​யப்​பட்டு வரு​வ​தாகக் கூறப்படுகிறது. இந்​நிகழ்ச்​சி​யில் ரன்​பீர் கபூர், சாய் பல்​ல​வி, யாஷ் ஆகியோர் பங்​கேற்க இருக்​கின்​றனர்.

<div class="paragraphs"><p><em>நடிகை சாய் பல்​லவி</em></p></div>
‘பாலன்’ படம் எப்படி? - வீடியோ விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in