சட்​ட​விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டேனா? - நடிகை ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

Updated on: 
1 min read

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்​றும் அவரது மாம​னாரும் தயாரிப்​பாள​ரு​மான வாசு பக்​னானி ஆகியோ​ருடன் தொடர்​புடைய 12 இடங்​களில் சமீபத்​தில் வரு​மான வரித்​துறை, சோதனை நடத்தியது.

நிதி முறை​கேடு, திரைப்​படத் தயாரிப்பு என்ற பெயரில் வெளி​நாடு​களுக்கு பணம் கடத்தி வரி ஏய்ப்பு நடந்​ததா என்ற சந்​தேகத்​தின் பேரில் இந்​தச் சோதனை​கள் நடத்​தப்​பட்​டன. இந்​நிலை​யில், அந்​தச் சோதனைக்கும் எனக்​கும் எந்​தத் தொடர்​பும் இல்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் அளித்​துள்ள விளக்​கத்​தில், “அந்​தச் சோதனைக்​கும் எனக்​கும் எந்​தத் தொடர்​பும் இல்​லை. நான் ராணுவப் பின்​னணி​யைக் கொண்​ட​வள்; திரை​யுல​கில் எனக்கு எந்த ஒரு பின்​புல​மும் கிடை​யாது என்​பதை அனை​வரும் அறிவர். கடும் உழைப்​பின் மூலமே இந்த இடத்​துக்கு வந்​துள்​ளேன்.

ஒரு பொறுப்​புள்ள, சட்​டத்தை மதிக்​கும் குடிமகளாக, எனது 20-வது வயதிலிருந்தே உரிய வரி​களைச் செலுத்தி வரு​கிறேன். தனிப்​பட்ட முறை​யிலோ அல்​லது எந்​தவொரு தயாரிப்பு நிறு​வனத்​தின் சார்​பாகவோ, சட்​ட​விரோத வெளி​நாட்​டுப் பணப் பரி​மாற்​றத்​தி​ல் நான் ஈடு​பட​வில்​லை.

மேலும், நாட்​டின் எந்​தப் பகு​தி​யிலும் அல்​லது வெளி​நாடு​களிலோ பினாமி சொத்​துக்​களை நான் வைத்​திருக்​கவில்​லை என்​ப​தை​யும்​ சொல்​ல விரும்​புகிறேன்” என்​று தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>நடிகை ரகுல் ப்ரீத் சிங்</p></div>
Oppo F35 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in