பெண்​களுக்கு எதி​ரான இணைய​வழி குற்றங்களுக்கும் கடும் தண்டனை: ஹூமா குரேஷி கோரிக்கை

பெண்​களுக்கு எதி​ரான இணைய​வழி குற்றங்களுக்கும் கடும் தண்டனை: ஹூமா குரேஷி கோரிக்கை
Updated on
1 min read

தமிழில் ரஜினி​யின் ‘காலா’, அஜித்​தின் ‘வலிமை’ ஆகிய படங்களில் நடித்​திருப்​பவர் இந்தி நடிகை ஹூமா குரேஷி. இப்போது யாஷின் ‘டாக்​ஸிக்’ உள்பட சில படங்​களில் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்​தில் அளித்​துள்ள பேட்​டி​யில், பெண்​களுக்கு எதி​ரான இணை​ய​வழி துன்​புறுத்​தல், ஈவ்​-டீசிங் உள்​ளிட்ட தொல்​லைகள் குறித்​துப் பேசி​னார். அவர் கூறும்​போது, “எனது சமூக வலை​தளப் பக்​கத்​தில் சிலர், ‘உங்​களு​டைய பிகினி புகைப்படத்​தைப் பகிருங்கள்’ என்று கேட்​கிறார்​கள். இது அரு​வருப்​பானது, அது​போன்ற கருத்​துகள் மிக​வும் வேதனையளிக்​கிறது.

ஒரு பெண்ணை உடல் ரீதி​யாகவோ அல்​லது தெரு​வில் துன்புறுத்தி​யதற்​காகவோ கொடுக்​கப்​படுவதை போல, இணை​ய​வழி துன்​புறுத்​தலுக்​கும் தண்​டனை வழங்​கப்பட வேண்​டும். இரண்​டுக்​கும் பெரிய வித்​தி​யாசம் இல்​லை. ஆன்​லைன் துஷ்பிரயோகத்தை, தீவிர​மாக எடுத்​துக் கொள்ள வேண்​டும்.

அடிப்​படை​யான ஒன்​றைச் சொல்ல விரும்​பு​கிறேன்: தயவுசெய்து பெண்​களின் உடைகள், ஒப்​பனை, அவர்​கள் என்ன செய்​கிறார்​கள், எந்த நேரத்​தில் வீட்​டுக்கு வரு​கிறார்​கள், அவர்​களின் எடை என்ன? என்​பது பற்றி கருத்து தெரி​விப்​பதை நிறுத்​துங்​கள்” என்றார்.

பெண்​களுக்கு எதி​ரான இணைய​வழி குற்றங்களுக்கும் கடும் தண்டனை: ஹூமா குரேஷி கோரிக்கை
‘வாட்ஸ் அப்​பில் என் பெயரில் மோசடி’ - ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in