

பிரபலங்களின் பெயரில் சிலர் போலி சமூக ஊடக கணக்குகளைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகை அதிதி ராவ் ஹைதாரி, ஸ்ரேயா ஆகியோர் பெயர்களில் மோசடி நடப்பதாக அவர்கள் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் பெயரில் சிலர் மோசடி முயற்சியில் இறங்கியுள்ளனர். இது பற்றிய ஸ்கீரீன் ஷாட் ஒன்றை வெளியிட்டுள்ள அவர், எச்சரித்துள்ளார். அதில், “என்னைப் போலவே வாட்ஸ் அப்பில் ஆள்மாறாட்டம் செய்து யாரோ ஒருவர் மற்றவர்களுடன் ‘சாட்’ செய்து வருவது தெரியவந்துள்ளது.
அது நான் அல்ல, அது என்னுடைய எண்ணுமில்லை. அந்த எண்ணில் இருந்து வரும் அழைப்பை ஏற்கவேண்டாம். ‘பிளாக்’ செய்துவிடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.