அரசு பள்ளியை மேம்படுத்த ரூ.1 கோடி அளித்த அக் ஷய் குமாருக்கு குவியும் பாராட்டு

அரசு பள்ளியை மேம்படுத்த ரூ.1 கோடி அளித்த அக் ஷய் குமாருக்கு குவியும் பாராட்டு
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், ஜம்​மு-​காஷ்மீரின் எல்​லைப் பகு​தி​யில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றை ரூ.1 கோடி செல​வில் மேம்​படுத்​தி​யுள்​ளார்.

கடந்த 2021ம் ஆண்​டு, எல்​லைப் பாது​காப்​புப் படை​யின் அழைப்​பின் பேரில் காஷ்மீர் எல்​லைப் பகு​திக்கு அக் ஷய் குமார் சென்றிருந்​தார். அங்​குள்ள எல்​லைக் கட்​டுப்​பாட்​டுக் கோடு அருகே, குரேஸ் பள்​ளத்​தாக்​கின் நெரோ துலைல் கிராமத்​துக்​குச் சென்​றார். அங்​குள்ள அரசு பள்ளி மாணவர்​களு​டன் கலந்துரையாடிய​போது, அவர்​களின் கல்​வித் தேவை​களை​யும் பள்​ளி​யின் நிலை​யை​யும் கண்டு உடனடி​யாக ரூ.1 கோடி நிதியுதவி வழங்​கு​வ​தாக அறி​வித்​தார். அதன்​படி அவர் அளித்த நிதி​யுத​வியைக் கொண்​டு, பள்​ளி​யின் உள்​கட்​டமைப்பை மேம்படுத்​தி​ உள்​ளனர்.

புதிய வகுப்​பறை​கள், கணினி ஆய்​வகம், நூல​கம் மற்​றும் ஆசிரியர்​களுக்​கான அலு​வலக அறை ஆகியவை கட்டப்பட்டுள்ளது. அக் ஷய் குமார் தனது மறைந்த தந்தை ஹரி ஓம் பாட்​டி​யா​வின் நினை​வாக, இந்​தப் புதிய பள்ளி கட்​டிடத்​துக்கு ‘ ஹரி ஓம் பாட்​டியா கல்வி வளாகம்’ என்று பெயரிட்​டுள்​ளார். அக்ஷய் குமாரின் இச் செயலை சமூக வலை​தளங்​களில் பாராட்டி வரு​கின்​றனர்.

அரசு பள்ளியை மேம்படுத்த ரூ.1 கோடி அளித்த அக் ஷய் குமாருக்கு குவியும் பாராட்டு
Su from So: பானுவுக்காக ‘மனமிறங்கிய’ சோமேஸ்வர சுலோச்சனா | திரை தேவதைகள் 18

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in