‘டெக்ஸ்லா’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன்?

‘டெக்ஸ்லா’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன்?
Updated on
1 min read

‘டெக்ஸ்லா’ படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஜெய், சுராஜ் வெஞ்சுரமுடு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகவுள்ள படம் ‘டெக்ஸ்லா’. கண்ணன் ரவி தயாரிக்கவுள்ள இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது இதில் கவுரவ கதாபாத்திரம் ஒன்றில் அபிஷேக் பச்சன் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலுமே இப்படத்தின் அறிமுக டீஸர் வெளியானது. இப்போது அபிஷேக் பச்சனும் நடிக்கவுள்ளதால் இந்தியளவில் இப்படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக விஷ்ணு ரங்கசாமி, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதன் படப்பிடிப்பை தொடங்கினால், ஒரே கட்டமாக முடித்துவிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

‘டெக்ஸ்லா’ அப்டேட்: கவுரவ கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன்?
Lava Bold N1 போனின் புதிய வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in