‘ஜவான்’ பாடல் காட்சி - நயன்தாரா பங்கேற்பு

நயன்தாரா
நயன்தாரா
Updated on
1 min read

ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கும் படம், ‘ஜவான்’. சஞ்சய் தத், தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். ஷாருக்கான் நடித்த ‘பதான்’ சூப்பர் ஹிட்டாகி இருப்பதால், அட்லீ இயக்கும் இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனிருத் இசை அமைக்கிறார். ஜூன் 2ம் தேதி வெளியாகிறது.

பான் இந்தியா படமான இதில் ஷாருக்கான் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. 2 பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி இருந்தது. முதல் பாடல் காட்சி படப்பிடிப்பு மும்பையில் இந்த வாரம் நடக்கிறது. இதில் நயன்தாரா, ஷாருக்கான் பங்கேற்கின்றனர். 2-வது பாடல் காட்சியில் தீபிகா படுகோன் பங்கேற்கிறார். இரண்டு பாடல்களையும் வரும் 15ம் தேதிக்குள் எடுத்து முடிக்க அட்லீ திட்டமிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in