ஜவான் ஷூட்டிங் நிறைவு - திட்டமிட்டபடி ரிலீஸ்

ஜவான் ஷூட்டிங் நிறைவு - திட்டமிட்டபடி ரிலீஸ்
Updated on
1 min read

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கும் படம், ‘ஜவான்’. சஞ்சய் தத், தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கிறார். ஜூன் 2ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிய இன்னும் நேரமாகும் என்பதால், இதன் வெளியீடு, அக்டோபர் மாதத்திற்குத் தள்ளிப்போகலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், இதன் படப்பிடிப்பு வியாழக்கிழமையோடு முடிவடைந்துவிட்டது.

படப்பிடிப்பு நடக்கும்போதே போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் செய்துவிட்டதால், திட்டமிட்டபடி ஜுன் 2ம் தேதி படம் வெளியாகும் என்றும் மே மாதம் பட புரமோஷன் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஷாருக்கான் நடித்த ‘பதான்’ சூப்பர் ஹிட்டாகி இருப்பதால், இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தை முடித்துவிட்டு இயக்குநர் அட்லீ, விஜய் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in