மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக நடிகை டாப்ஸி மீது போலீஸில் புகார்

மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக நடிகை டாப்ஸி மீது போலீஸில் புகார்
Updated on
1 min read

தமிழில், ‘ஆடுகளம்’, ‘காஞ்சனா 2’, ‘ஆரம்பம்’, ‘வை ராஜா வை’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார் டாப்ஸி. இப்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் கவர்ச்சியான ஆடை அணிந்து, கழுத்தில் மகாலட்சுமி உருவத்துடன் கூடிய நெக்லஸ் அணிந்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. கவர்ச்சி ஆடையில் கடவுள் உருவம் பொறித்த நெக்லஸை எப்படி அணியலாம் என்று அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. இந்து கடவுளை அவமதித்து விட்டதாகக் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த, இந்து ரக்‌ஷக் சங்கதன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் பாஜக எம்.எல்.ஏ மாலினி கவுரின் மகனுமான ஏகலைவா சிங் கவுர் என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்து மத உணர்வுகளை டாப்ஸி புண்படுத்திவிட்டதாக அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in