பாலிவுட்
லவ் டுடே இந்தி ரீமேக்கில் ஸ்ரீதேவியின் 2வது மகள்
பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக நடித்த படம், ‘லவ் டுடே’. இவானா, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உட்பட பலர் இதில் நடித்திருந்தனர்.
நவீன காதலை காமெடியாக சொல்லியிருந்த இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நடிகர் ஆமீர்கானின் மூத்தமகன் ஜுனைத்தும் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூரும் இணைந்து இதன் ரீமேக்கில் நடிக்க இருக்கின்றனர். பான்டோம் ஸ்டூடியோஸுடன் இணைந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
